News August 10, 2024
திருத்தணி கோயிலில் நடிகை ரோஜா தரிசனம்

நடிகையும் ஆந்திர மாநில முன்னாள் அமைச்சருமான ரோஜா, திருத்தணி முருகன் கோயிலில் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். ஆடி சஷ்டியை முன்னிட்டு கோயிலுக்கு சென்ற அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காவடியை தூக்கி முருகனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளார் ரோஜா. அவருடன் போட்டோ எடுக்க ரசிகர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
Similar News
News December 8, 2025
ஈரோடு: ரூ.50,000 சம்பளத்தில் SBI வங்கியில் வேலை!

ஈரோடு மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் வரும் டிச.23ம் தேதிக்குள், இந்த லிங்கை<
News December 8, 2025
FLASH: தங்கம் விலையில் மாற்றமில்லை

தங்கம் விலையில் இன்று(டிச.8) மாற்றிமின்றி 22 கேரட் 1 கிராம் ₹12,040-க்கும், சவரன் ₹96,320-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வார இறுதியில் கிடுகிடுவென உயர்ந்து வந்த தங்கத்தின் விலையானது, சர்வதேச சந்தையில் நிலவும் மந்தநிலை(1 அவுன்ஸ் $4,210) காரணமாக இன்று விலையில் எவ்வித மாற்றமுமின்றி விற்பனையாகிறது. சுபமுகூர்த்த மாதம் என்பதால் இது நடுத்தர மக்களை சற்று நிம்மதியில் ஆழ்த்தியுள்ளது.
News December 8, 2025
NDA கூட்டணியில் சேர பாஜக மிரட்டலா? டிடிவி விளக்கம்

பாஜக அதிகாரத்தை பயன்படுத்தி மற்ற கட்சிகளை அழுத்துகிறது என்ற குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ளவில்லை என டிடிவி தினகரன் கூறியுள்ளார். கூட்டணிக்காக அதிகாரத்தை வைத்து பாஜக மிரட்டுகிறது என்று நினைக்கவில்லை என கூறிய அவர், நட்பு ரீதியாகவே பேசுவதாகவும் விளக்கமளித்துள்ளார். மேலும், அதிமுகவை ஒருங்கிணைக்க நினைக்கும் பாஜகவின் எண்ணத்தையும் குறை சொல்ல முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.


