News September 14, 2024
யூ டியூபர் மீது போலீசில் நடிகை ரோஹிணி புகார்

யூ டியூபர் காந்தராஜ் மீது சென்னை போலீசில் நடிகை ரோஹிணி பரபரப்பு புகார் அளித்துள்ளார். சென்னை கமிஷனர் அலுவலகத்தில் ரோஹிணி அளித்துள்ள புகாரில், அனைத்து நடிகைகளையும் விபச்சாரி போல சித்தரித்தும், பணம் மற்றும் பட வாய்ப்புக்காக நடிகைகள் எதை வேண்டும் என்றாலும் செய்வார்கள் எனவும் காந்தராஜ் பேசியிருப்பதாகவும், ஆதலால் அவர் மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டு கொண்டுள்ளார்.
Similar News
News December 10, 2025
சட்டம் மக்களுக்கு சுமையாக இருக்கக் கூடாது: PM மோடி

மக்கள் அன்றாடம் சந்திக்கும் இடர்களை குறைப்பதே சீர்திருத்தம் என PM மோடி கூறியுள்ளார். அரசு திட்டங்களை மக்கள் பெறுவது எளிதாக்கப்பட வேண்டும் என கூறிய அவர், இதற்காக நடைபெறும் நீண்ட Paperwork முறையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும், எந்தவொரு சட்டமும் மக்களுக்கு சுமையாக இருக்க கூடாது எனவும் விதிமுறைகள் எப்போதும் அவர்களின் வசதிக்காகவே இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
News December 10, 2025
OPS மகன்கள் அதிமுகவில் இணைகிறார்களா?

OPS மகன்களை மீண்டும் அதிமுகவில் இணைக்க மூத்த நிர்வாகிகள் சிலர் முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இதனை EPS எதிர்க்கவில்லை என்றாலும், தள்ளிப்போடுகிறார் என விவரமறிந்தவர்கள் சொல்கின்றனர். ஒருவேளை மகன்களை சேர்த்துக்கொள்ள EPS தாமதித்தால், தனது ஆதரவாளர்களோடு பாஜக தரும் 5 சீட்களை பெற்றுக்கொண்டு NDA கூட்டணியில் OPS இடம்பெறுவார் என்கின்றனர். இதுபற்றிய Official தகவலுக்கு காத்திருப்போம்.
News December 10, 2025
டைரக்டராக களமிறங்குகிறாரா கீர்த்தி சுரேஷ்?

தனக்கு டைரக்ஷனில் ஆர்வம் இருப்பதாகவும், பல கதைகளை எழுதி வருவதாகவும் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் சொல்லியிருந்தார். இதையொட்டி சில அசோசியேட் இயக்குநர்களை அழைத்து அவர் கதை விவாதம் நடத்த தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும், தனுஷ், சிவகார்த்திகேயனுக்கு செட் ஆவதுபோல் ஒரு கதையை அவர் உருவாக்கி வருவதாகவும் பேசப்படுகிறது. கதை முழுமையாக தயாரான உடன் இதுகுறித்த Official தகவல் வெளியாகலாம்.


