News April 3, 2025
சீரியலில் நடிக்க நடிகை ரவீனாவுக்கு ரெட் கார்ட்?

நடிகை ரவீனா ‘சிந்து பைரவி’ தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி, பிறகு 2 ஹீரோயின் கதை என்பது தெரிந்து, அதிலிருந்து விலகினார். இதனால், தயாரிப்பு நிறுவனம் கொடுத்த புகாரின் பேரில் அவருக்கு சீரியல்களில் நடிக்க ரெட் கார்டு போடப்பட்டதாக தகவல் பரவியது. இதற்கு விளக்கமளித்த ரவீனா, புகார் அளிக்கப்பட்டது உண்மைதான், ஆனால் பிரச்னையைப் பேசி தீர்த்தாகி விட்டது என்றும், சீரியலில் நடிக்க தடை இல்லை எனவும் கூறி இருக்கிறார்.
Similar News
News April 8, 2025
நுகர்வோர் புகார்களை தெரிவிக்க விரைவில் செயலி

நுகர்வோர் புகார்களை தெரிவிக்க செயலி வெளியிடப்படும் என்று உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் நோக்கில், அவர்களுக்கு ஏற்படும் சேவை குறைபாடுகள் குறித்து சம்பவ இடத்தில் இருந்து புகார் அளிக்க ₹20 லட்சத்தில் வலைதளம், செயலி உருவாக்கப்படும் எனக் கூறியுள்ளது. இதற்கான செலவினம் நுகர்வோர் நலநிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
News April 8, 2025
இன்ஸ்டாவில் நிர்வாண படம்.. விரைவில் கட்டுப்பாடு

இன்ஸ்டாவில் நிர்வாண போட்டோ, லைவ் ஸ்ட்ரீமுக்கு மெட்டா நிறுவனம் விரைவில் கட்டுப்பாடு விதிக்கவுள்ளது. பெற்றோர் ஒப்புதல் இல்லாமல் 16 வயதுக்கு குறைவானோர் லைவ் செய்யவும், நிர்வாண படம் வெளியிடவும் முடியாது. டீன் ஏஜர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்கள் மீது பெற்றோர் கட்டுபாட்டை உறுதி செய்யவும் இந்நடவடிக்கை எடுக்கிறது. முதலில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸி.யில் இதை அமல் செய்ய உள்ளது.
News April 8, 2025
விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன்: அமைச்சர்

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பித்த அன்றே பயிர்க்கடன் வழங்கும் நடைமுறை தொடங்கப்பட இருப்பதாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். வங்கிகளில் நேரில் விண்ணப்பித்தால், ஒரு வாரத்திற்குள் கடன் வழங்கும் நடைமுறை தற்போது இருப்பதாக அவர் கூறியுள்ளார். இதற்கு பதிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பித்த அன்றே கடன் வழங்கும் முறை தொடங்கப்பட இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.