News April 7, 2025
நடிகை ரன்யா ராவ் நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

தங்கக் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவின் நீதிமன்றக் காவல் 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. துபாயில் இருந்து தங்கம் கடத்தியபோது ரன்யா ராவ் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். இதேபோல், தருண் ராஜூ, சாஹில் ஜெயின் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 3 பேரின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததால் கோர்ட் மீண்டும் அதை நீட்டித்துள்ளது.
Similar News
News December 8, 2025
அமீர்கான் பட இயக்குநர் கைது

₹30 கோடி மோசடி வழக்கில் பிரபல பாலிவுட் இயக்குநர் விக்ரம் பட் மற்றும் அவரது மனைவி ஸ்வேதாம்பரியை ராஜஸ்தான் போலீசார் கைது செய்துள்ளனர். படம் எடுப்பதாக கூறி டாக்டர் அஜய் முர்தியா என்பவரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விக்ரம் பட்டின் மகள் உள்பட 8 பேர் மீது FIR பதிவு செய்யப்பட்டுள்ளது. அமீர்கான் நடித்த ‘குலாம்’ படத்தை இயக்கியவர் விக்ரம் பட்.
News December 8, 2025
கிருஷ்ணர் சிலையை திருமணம் செய்த இளம்பெண்

உ.பி.யை சேர்ந்த பிங்கி சர்மா (28) எனும் இளம்பெண், பகவான் கிருஷ்ணர் மீதுள்ள அதீத பக்தியால், அவரது சிலையை திருமணம் செய்து கொண்டார். பெண்ணின் குடும்பத்தார், கிராமத்தார் புடைசூழ, அனைத்து பாரம்பரிய சடங்குகளும் செய்யப்பட்டு இந்த மங்களகரமான நிகழ்வு நடந்துள்ளது. வட இந்திய முறைப்படி, கிருஷ்ணரின் சிலையை கைகளில் ஏந்தி, 7 புனித சபதங்களை ஏற்று, கிருஷ்ணரை தனது வாழ்க்கை துணையாக அவர் ஏற்றுக்கொண்டார்.