News September 2, 2025
நடிகை ரன்யா ராவிற்கு ₹102 கோடி அபராதம்

தங்க கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவிற்கு ₹102 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. துபாயில் இருந்து 14.8 கி.கி., தங்கம் கடத்தி வந்த போது, பெங்களூரு ஏர்போர்ட்டில் வைத்து கடந்த மார்ச் 3-ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார். மேற்கூறிய அபராதத்தை செலுத்த தவறினால் அவரது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ரன்யா தமிழில் விக்ரம் பிரபு நடித்த ‘வாகா’ படத்தில் நடித்தவர்.
Similar News
News March 29, 2026
வாய்வழி செக்ஸ்.. கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

கணவன் – மனைவி இடையே நடக்கும் வாய்வழி, ஆசனவாய் உடலுறவு குற்றமல்ல என மத்திய பிரதேச ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377-ன் கீழ் இயற்கைக்கு மாறான செயலில் ஈடுபடும் குற்றமாகாது நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். பிந்த் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர், Oral and Anal sex-க்கு வற்புறுத்தியதாக அளித்த புகாரில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
News March 29, 2026
முக்கிய தொகுதிகளில் போட்டியிடும் TVK வேட்பாளர்கள்

கே.வி.குப்பம்-தென்றல் குமார், குடியாத்தம்-கே.சிந்து, ஆம்பூர்-இம்தியாஸ், உத்திரமேரூர்-முனிரத்தினம், சோளிங்கர்-டாக்டர் கபில், செங்கம்-பாரதிதாசன், திருக்கோவிலூர்-பரணி பாலாஜி, பாலக்கோடு-ஆர்.கோபி, பென்னாகரம்-கஜேந்திரன், தருமபுரி-எம்.சிவன், பாப்பிரெட்டிபட்டி-திலகவதி, அவினாசி-கமலி, திண்டுக்கல் – நசீர் ராஜா, நத்தம்-ரமேஷ், வேடசந்தூர்-நாகஜோதி ஆகியோர் தவெக சார்பில் போட்டியிடுகின்றனர். <<-se>>#TNElection2026<<>>
News March 29, 2026
என் கணவர் கொலைக்கு நீதி கிடைக்கணும்: பொற்கொடி

திரு.வி.க நகரில் வேட்பாளராக <<19504859>>அறிவிக்கப்பட்டுள்ள ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி<<>> EPS-ஐ சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் முதல்முறையாக போட்டியிடுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, தனது கணவர் கொலைக்கு நீதி கிடைக்க இந்த தேர்தல் தனக்கு மிக முக்கியம்; திரு.வி.க நகரில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவேன் என நம்பிக்கை தெரிவித்தார்.<<-se>>#TNElection2026<<>>


