News April 13, 2024

பைக்கில் வாக்கு சேகரித்த நடிகை ராதிகா

image

நடிகை ராதிகா, கணவர் சரத்குமாரோடு பைக்கில் சென்று வாக்கு சேகரித்தார். விருதுநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கியுள்ள ராதிகா நடிகை ராதிகா கடந்த 10 நாட்களாக தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். ஜீப்பில் தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டு வரும் அவர், குறுகலான இடங்களில் தனது கணவர் சரத்குமாரோடு பைக்கில் சென்று பரப்புரையில் ஈடுபட்டார். இருவரையும் கண்ட பொதுமக்கள் அவர்களுடன் புகைப்படம் எடுத்தனர்.

Similar News

News April 30, 2025

குளு குளு AC-யில் தூக்கமா? அப்போ உஷார்…

image

கோடை வெயில் பட்டையை கிளப்பும் நேரத்தில் AC இல்லாம தூங்க முடியல என சொல்பவரா நீங்கள்? உங்களுக்கு முக்கிய எச்சரிக்கையை மருத்துவர்கள் கொடுத்துள்ளனர். 20°C கீழே AC வைத்து தூங்கினால், உடலில் பல பிரச்னைகள் வர வாய்ப்புள்ளதாம். முக்கியமாக சளி, இருமல், தோல் நோய்கள் உள்ளிட்டவை வருமாம். ஹார்மோன் உற்பத்தி, நீர்சத்து குறைவு உள்ளிட்ட பாதிப்பும் ஏற்படுமாம். AC அளவு 24°C – 26°C இருப்பதுதான் உடலுக்கு நல்லதாம்.

News April 30, 2025

சென்னை வரும் அமித்ஷா.. பாஜகவுக்கு 40 சீட்?

image

சமீபத்தில் சென்னை வந்த அமித்ஷா, அதிமுக உடனான கூட்டணியை உறுதி செய்தார். இந்நிலையில் மே 3-ல் மீண்டும் அவர் சென்னை வரவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணத்தின்போது, சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் செயல்பாடு, தொகுதி பங்கீட்டில் 40 சீட் வரை அதிமுகவிடம் கேட்பது குறித்தும், திமுகவின் ஊழல் குற்றச்சாட்டுகள், முறைகேடுகளை மக்களிடம் கொண்டு செல்வது குறித்தும் ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

News April 30, 2025

ராசி பலன்கள் (30.04.2025)

image

➤மேஷம் – பயம் ➤ரிஷபம் – நன்மை ➤மிதுனம் – நற்செயல் ➤கடகம் – ஆதாயம் ➤சிம்மம் – சுகம் ➤கன்னி – எதிர்ப்பு ➤துலாம் – ஆக்கம் ➤விருச்சிகம் – பொறுமை ➤தனுசு – பேராசை ➤மகரம் – முயற்சி ➤கும்பம் – நட்பு ➤மீனம் – புகழ்.

error: Content is protected !!