News August 8, 2024

கிளாமருக்கு ‘No’ சொன்ன நடிகை நமீதா

image

கிளாமராக நடிக்க நிறைய வாய்ப்புகள் வருவதாகவும், அதற்கெல்லாம் மறுப்பு தெரிவித்து வருவதாகவும் நடிகை நமீதா தெரிவித்துள்ளார். பெண்களை மையப்படுத்தும் திரைப்படங்கள், தற்போது அதிகம் வருவதாகவும் அதுபோன்ற படங்களில் நடிக்க விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தாயாக தனது குழந்தைகளை கவனித்து வந்ததால் நடிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்ற அவர், இனி மீண்டும் திரையில் பார்க்கலாம் என்றார்.

Similar News

News December 8, 2025

நட்புன்னா என்னான்னு தெரியுமா?

image

8 வயதில், நமது நண்பர்களுக்கு என்ன Gift கொடுத்திருப்போம்? மிஞ்சிப்போனால் பேனா, பென்சில், ரப்பர். ஆனால் சீனாவில் நட்பை வளர்க்க, தாயின் தங்க செயினையே வெட்டி, மாணவர்களுக்கு பரிசாக வழங்கியுள்ளான் 8 வயது சிறுவன். வேடிக்கை என்னவென்றால் ஒரு மாதம் கழித்தே பெற்றோருக்கு இது தெரிந்துள்ளது. பல பேரிடம் கொடுத்ததால், தங்க துண்டுகளை மீட்பது பெரும்பாடாக உள்ளதாக கூறப்படுகிறது. சிறுவயதில் நீங்கள் கொடுத்த கிப்ட் எது?

News December 8, 2025

விஜயகாந்தை விட விஜய் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்: TTV

image

விஜய் தலைமையில் வலுவான கூட்டணி அமைந்தால், அது ஆளும் கட்சிக்கு சரியான போட்டியாக இருக்கும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். விஜய்காந்த் வருகையால் 2006-ல் திமுக மைனாரிட்டி ஆட்சி அமைந்தது, அதைவிட பெரிய தாக்கத்தை விஜய் ஏற்படுத்துவார் எனவும் கணித்துள்ளார். இப்படி சொல்வதால் தவெகவுடன், அமமுக கூட்டணி அமைக்கும் என்பது உறுதி இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

News December 8, 2025

பிரபல நடிகர் மரணம்.. மனைவி உருக்கம்

image

‘பிறந்தநாள் வாழ்த்துகள், என் இதயமே’ என மறைந்த கணவர் தர்மேந்திராவை ஹேமமாலினி உருக்கமாக வாழ்த்தியுள்ளார். நீ என்னைவிட்டு சென்று 2 வாரங்களை கடந்த நிலையில், நொறுங்கி போன மனதை மெதுவாக ஒட்டவைத்து வருகிறேன். என்னுடன் எப்போதும் நீ இருப்பாய் என தெரியும். நம் சந்தோஷமான நினைவுகளை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன். நம் அழகான நினைவுகளுக்காவும், இரு அழகிய மகள்களுக்காகவும் கடவுளுக்கு நன்றி சொல்கிறேன் என உருகியுள்ளார்.

error: Content is protected !!