News April 13, 2025
பிரபல நடிகரை 2வது திருமணம் செய்யும் நடிகை மேகனா ராஜ்?

பிரபல நடிகை மேகனா ராஜ் நடிகர் விஜய் ராகவேந்திராவை 2வது திருமணம் செய்யவுள்ளதாக தகவல் ஒன்று வெளிவந்தது. ஆனால், அதில் உண்மையில்லை என இருவருமே மறுத்து விட்டனர். மேகனாவின் கணவர் சிரஞ்சீவி சர்ஜா, கடந்த 2020ல் உயிரிழந்ததை தொடர்ந்து, அவர் தனது குழந்தைகளை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். இவர் தமிழில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 430 போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
Similar News
News December 5, 2025
உலகிலேயே அதிகம் டிராக் செய்யப்பட்ட புடின் விமானம்

ரஷ்ய அதிபர் புடின் தன் பிரத்யேக விமானமான ‘Flying Kremlin’-ல் இந்தியா வந்துள்ளார். அவர் வந்த இந்த விமானம் தான், இன்று உலகிலேயே அதிகம் டிராக் செய்யப்பட்ட விமானம் என, விமானங்களை டிராக் செய்யும் இணையதளமான Flight Radar 24 தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் 20,000-க்கும் மேற்பட்டவர்கள் புடினின் விமானத்தை Live ஆக இன்று கண்காணித்து வந்ததாகவும் கூறியுள்ளது.
News December 5, 2025
விடுமுறை: சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு

வார விடுமுறையையொட்டி நாளை (டிச.5) முதல் டிச.7 வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து மக்கள் சிரமமின்றி ஊருக்கு செல்ல கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்தால் உடனடியாக டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள். சற்றும் தாமதிக்காமல் டிக்கெட் புக் செய்ய இங்கே <
News December 5, 2025
மீண்டும் கேமியோவில் விஜய் மகன்

விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தனது முதல் படமான சிக்மாவை விறுவிறுப்பாக இயக்கி வருகிறார்.. சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்துக்காக விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதனிடையே தமன் இசையில் படத்தில் வரும் ஒரு குத்து பாடலில் ஜேசன் சஞ்சய் கேமியோ டான்ஸ் செய்திருக்கிறாராம். ஏற்கனவே வேட்டைக்காரன் படத்தில் விஜய்யுடன் இணைந்து சிறு வயதில் ஜேசன் சஞ்சய் நடனமாடியிருந்தார்.


