News April 19, 2025
நடிகை குஷ்புவின் ‘X’ அக்கவுண்ட் ஹேக்!

தனது ‘X’ அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு அறிவித்துள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தனது ஐடியை மீட்க யாரேனும் உதவி செய்யுமாறு ‘Please Help Me’ எனக் கோரிக்கை விடுத்துள்ளார். குஷ்புவின் ‘X’ அக்கவுண்ட் ஏற்கனவே பலமுறை ஹேக் செய்யப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.
Similar News
News November 15, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 15, ஐப்பசி 29 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:31 AM – 9:00 AM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 PM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: ஏகாதசி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶சந்திராஷ்டமம்: அவிட்டம் ▶சிறப்பு: ஏகாதசி விரதம், கருட தரிசனம் நன்றி. ▶வழிபாடு: பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுதல்.
News November 15, 2025
35 ஆண்டுகளாக MLA-கள்.. மீண்டும் வெற்றி

பிஹார் NDA கூட்டணி மூத்த வேட்பாளர்களான பிரேம் குமார் (BJP), பிஜேந்திர பிரசாத் யாதவ் (JDU) ஆகியோர், 9-வது முறையாக மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் 1990 முதல் MLA-க்களாக உள்ளனர். கயா தொகுதியில் பிரேம் குமார் 26,423 வாக்குகள் வித்தியாசத்திலும், பிஜேந்திர சிங் 30,803 வாக்குகள் வித்தியாசத்திலும் வென்றுள்ளனர். இருவரும் இதே தொகுதிகளில் கடந்த 35 ஆண்டுகளாக MLA-க்களாக உள்ளனர்.
News November 15, 2025
வி.சேகர் மறைவு வேதனை அளிக்கிறது: அன்புமணி

திரைப்பட இயக்குநர் வி.சேகர் மறைவு வேதனை அளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி இரங்கல் தெரிவித்துள்ளார். திரைப்படங்கள் பொழுதுபோக்குக்கான கருவிகள் என்பதையும் கடந்து, தமது திரைப்படங்கள் வாயிலாக பொதுவுடமை, சமத்துவம், சமூகநீதி கருத்துகளைப் பரப்பியவர். முகம் சுழிக்காமல் குழந்தைகளுடன் குடும்பமாக சேர்ந்து பார்க்கும் வகையிலான திரைப்படங்களை படைத்தவர் வி.சேகர் என்றும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.


