News February 23, 2025
ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த நடிகை

ஆம் ஆத்மி கட்சியில் பிரபல நடிகை சோனியா மான் இணைந்துள்ளார். மலையாளம், தெலுங்கு, பஞ்சாபி மொழிகளில் ஏராளமான படங்களில் அவர் நடித்துள்ளார். பிரபல பாடகர் சித்து மூஸ் வாலா உள்ளிட்ட பலரின் இசை ஆல்பங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் அவர், அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார். அவர், விவசாய அமைப்புத் தலைவர்களில் ஒருவரான பல்தேவின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 24, 2025
இந்தியாவில் இத்தனை அதிசயங்களா?

உலகளவில் எந்தெந்த நாடுகளில் அதிகளவு UNESCO கலாசார தளங்கள் இருக்கிறதென்ற பட்டியல் வெளியாகியிருக்கிறது. அதில், முதலிடத்தில் 60 தளங்களுடன் இத்தாலி உள்ளது. 43 தளங்களுடன் இந்தியா 6ஆவது இடத்தில் உள்ளது. அவற்றில், தாஜ் மகால், அஜந்தா குகைகள் ஆகியவையும் அடங்கும். தமிழகத்தில் தஞ்சை பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம், மகாபலிபுரம், நீலகிரி மலை ரயில் ஆகியவை இப்பட்டியலில் உள்ளன.
News February 24, 2025
நெடுஞ்சாலை டோல்கேட்டுகளில் டிஸ்கவுண்ட்.. அரசு திட்டம்

நெடுஞ்சாலை டோல்கேட்டுகளை தொடர்ந்து பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு கட்டணத்தில் டிஸ்கவுண்ட் அளிக்க அரசு திட்டமிட்டு வருகிறது. ஆண்டுக்கு ஆண்டு டோல் கட்டணம் அதிகரிப்பது வாகன ஓட்டிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், மாதம், வருட, ஆயுள்கால கட்டணத் தள்ளுபடியுடன் கூடிய பாஸ்களை அளிப்பது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
News February 24, 2025
செல்போனில் இந்த லைட் எரிகிறதா? அப்படினா HACK

ஸ்மார்ட்போன்கள் எண்ணிக்கை அதிகரித்துவிட்ட நிலையில், அதை வைத்து மோசடியும் அதிகமாக நடக்கின்றன. ஸ்மார்ட்போனை ஹேக் செய்து, அவர்களுக்கு தெரியாமலேயே உளவு பார்க்கும் வேலையும் நடக்கின்றன. ஆனால் இதை எளிதில் நாம் கண்டுபிடித்து விட முடியும். ஸ்மார்ட்போன் பயன்படுத்தாத போதும் கூட, பச்சை அல்லது சிவப்பு நிறத்தில் போனில் லைட் எரிந்தால் அது ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று அர்த்தம். உடனே போனை செக் பண்ணுங்க.