News March 14, 2025
நடிகையிடம் ₹2.27 லட்சம் அபேஸ்

திருப்பதியில் ஸ்பெஷல் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறி, நடிகை ரூபினியிடம் ₹2.27 லட்சம் மோசடி செய்துள்ளனர். ரூபினி, வெங்கடாசலபதியின் தீவிர பக்தை என தெரிந்து கொண்ட சரவணன் என்ற நபர் அவரை அணுகியுள்ளார். மேலும், பல பிரபலங்களுக்கு ஸ்பெஷல் தரிசனங்களை ஏற்பாடு செய்ததாக போலியான புகைப்படங்களை காட்டி சரவணன் மோசடி செய்துள்ளார். 1980களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் படங்களில் ரூபினி நடித்துள்ளார்.
Similar News
News March 15, 2025
‘ராட்சசன்’ இயக்குநர் அடுத்த படம் நாளை அறிவிப்பு

இயக்குநர் ராம்குமாரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. ‘ராட்சசன்’ படத்தைத் தொடர்ந்து தனுஷை வைத்து ராம்குமார் புதிய படம் இயக்குவதாக இருந்தது. இதற்காக 2 ஆண்டுகள் அவர் காத்திருந்த நிலையில், தனுஷ் திடீரென நடிக்க மறுத்தார். அதையடுத்து SK, விஷ்னு விஷாலிடம் அந்த கதையில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
News March 15, 2025
சிறப்பு கொள்முதல் முறை… ரத்து செய்தது டாஸ்மாக்

குடோன்களில் இருப்பு நிலவரத்தை வைத்து மாவட்ட மேலாளர்களே மதுபான நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் கொடுக்கும் சிறப்பு கொள்முதல் முறையை டாஸ்மாக் நிர்வாகம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. விற்பனையை அடிப்படையாக வைத்து இனி கொள்முதல் செய்யவும் முடிவு செய்துள்ளது. போதிய வரவேற்பு இல்லாத போதும் சில மதுபான நிறுவனங்களுக்கு அதிக ஆர்டர்கள் தரப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
News March 15, 2025
கிரேட் சார் நீங்க..

தெலங்கானாவில் 80 வயதான ஓய்வு பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர் பால் ரெட்டிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. 1970 முதல் 2004 வரை ஆசிரியராக பணியாற்றிய அவர், தற்போதும் கற்பிப்பதை நிறுத்தவில்லை. அரசுப் பள்ளிகளில் தெலுங்கு, கணிதம், ஆங்கிலம் கற்பித்து வருகிறார். தினமும் தனது சொந்த செலவில் 15 கி.மீ பயணித்து, ஒரு ரூபாய் கூட காசு வாங்காமல் மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்து வருகிறார்.