News December 31, 2024
கின்னஸ் சாதனை படைத்த நடிகை திவ்யா

வேதம், பாளையத்தம்மன் உட்பட சில தமிழ் படங்களில் நடித்தவர் மலையாள நடிகை திவ்யா உன்னி. திருமணத்துக்குப் பிறகு அமெரிக்காவில் வசித்து வரும் அவர், அங்கு நடனப்பள்ளி நடத்தி வருகிறார். இந்நிலையில் அவர் தலைமையில் கொச்சியில் 11,600 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற பரதநாட்டிய நிகழ்ச்சி கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் இருந்து பலர் கலந்துகொண்டனர்.
Similar News
News December 29, 2025
டிசம்பர் 29: வரலாற்றில் இன்று

*1904 – கவிஞர் குவெம்பு பிறந்தநாள்
*1960 – ஆஸ்திரேலிய வீரர் டேவிட் பூன் பிறந்தநாள்
*1974 – நடிகை டுவிங்கிள் கன்னா பிறந்தநாள்
*1987 – 326 நாள்கள் விண்வெளி பயணத்தை நிறைவு செய்து சோவியத் விண்வெளி வீரர் யூரி ரொமானின்கோ பூமி திரும்பினார்
*2015 – அறிஞர் தமிழண்ணல் நினைவுநாள்
News December 29, 2025
ரேபிட் செஸ்: இந்தியாவுக்கு 2 வெண்கலம்

உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு 2 வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது. ஆடவர் பிரிவில் 13 சுற்றுகள் முடிவில், 4 வீரர்கள் தலா 9.5 புள்ளிகளுடன் இரண்டாமிடம் பிடித்தனர். இதையடுத்து டை பிரேக்கரில் அர்ஜுன் எரிகைசி 3-ம் இடம் பெற்று வெண்கலம் வென்றார். மகளிர் பிரிவில் 11 சுற்றுகள் முடிவில், கோனெரு ஹம்பி வெண்கல பதக்கத்தை வசப்படுத்தினார். மேக்னஸ் கார்ல்சன் 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
News December 29, 2025
ரஷ்யா, உக்ரைன் போர்.. டிரம்ப் முக்கிய தகவல்

போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா, உக்ரைன் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தையால் போர் முடிவுக்கு வரலாம் அல்லது நீண்ட காலம் எடுக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், போரினால் லட்சக்கணக்கானோர் உயிரிழக்க நேரிடுவதை யாரும் விரும்பவில்லை எனவும் அவர் பேசியுள்ளார். இந்த போரை நிறுத்துவது மிகவும் சிரமமானது என டிரம்ப் குறிப்பிட்டார்.


