News March 16, 2025
நடிகை டெலியா ரஸோன் காலமானார்

பழம்பெரும் நடிகையான பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த டெலியா ரஸோன் (94) காலமானார். Krus na Bituin திரைப்படத்தின் மூலம் சினிமா வாழ்க்கையை தொடங்கிய அவர், பல்வேறு திரைப்படங்கள் & தொடர்களில் நடித்துள்ளார். “லுக்சாங் தகும்பே” திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான FAMAS விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட அவர், 2009இல் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார். அவரது மறைவிற்கு பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Similar News
News March 16, 2025
’தமிழர் கட்சி’ கலைக்கப்பட்டது

தமிழ் தேசிய கொள்கையுடன் இயங்கிவந்த தமிழர் கட்சியை, நாம் தமிழர் கட்சியுடன் இணைக்கப் போவதாக அதன் பொதுச்செயலாளர் தீரன் திருமுருகன் அறிவித்துள்ளார். ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் இந்த இணைப்பு விழா நடைபெறவுள்ளது. தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் & தொண்டர்கள் மொத்தமாக நாம் தமிழர் கட்சியில் இணையவுள்ளனர். இதனால், ‘தமிழர் கட்சி’ கலைக்கப்படுகிறது.
News March 16, 2025
தமிழக பாஜக தலைவர் பதவி ரேஸில் இல்லை: எச்.ராஜா பேட்டி

தமிழக பாஜக தலைவர் பதவிக்கான ரேஸில் தாம் இல்லை என்று மூத்தத் தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். அண்ணாமலை பதவிக்காலம் நிறைவடைவதால் புதிய தலைவர் எந்நேரமும் அறிவிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் எச்.ராஜா அளித்துள்ள பேட்டியில், கட்சித் தலைமை சொல்வதை மட்டுமே செய்யும் பழக்கம் தனக்கு இருப்பதாகவும், பதவியை எப்போதும் கேட்டுப் பெறும் பழக்கம் தன்னிடம் இல்லை என்றும் கூறியுள்ளார்.
News March 16, 2025
‘பைத்தியக்காரத்தனம்’… தோனி பற்றி பேசிய கோலி!

தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்தபோது, துணை கேப்டனாக செயல்பட்டது குறித்து விராட் கோலி மனம் திறந்து பேசியுள்ளார். ஃபீல்டிங் செட்டப் உள்ளிட்ட ஆட்ட வியூகங்களை பகிர்ந்தால், எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, இது என்ன பைத்தியக்காரத்தனம் போல் உள்ளது என தோனி ரியாக்ஷன் கொடுப்பார் என்று அவர் ஜாலியாக கூறியுள்ளார். தோனியிடம் நிறைய கற்றுக் கொண்டதாகவும் கோலி தெரிவித்தார்.