News March 21, 2025
விபச்சார வழக்கில் சிக்கிய நடிகை… சோகக் கதை

90களில் தமிழ், தெலுங்கு படங்களில் நாயகியாக கொடிக்கட்டி பறந்தவர் வினிதா. இவர் பெரிய குடும்பம், கட்டபொம்மன், சின்ன ஜமீன், வியட்நாம் காலனி, மிஸ்டர் மெட்ராஸ் உள்பட 70 படங்களில் நடித்து தன் அழகாலும், திறமையாலும் ரசிகர்களை ஈர்த்தார். காலத்தின் கோலம், அவர் விபச்சார வழக்கில் சிக்கி கைதானார். பின் நிரபராதி என வெளியே வந்தாலும், 8 ஆண்டுகளுக்கு பின் ஒரே படத்துடன் அவரின் கரியர் முடிவுக்கு வந்தது சோகம் தான்.
Similar News
News March 22, 2025
பரவும் வதந்திகள்.. கடுப்பான டிராகன் இயக்குநர்

பிரதீப் ரங்கநாதன் – அஷ்வத் மாரிமுத்து கூட்டணியில் உருவான டிராகன் படம் வசூலை வாரிக்குவித்தது. அடுத்ததாக அஷ்வத், சிலம்பரனை வைத்து ‘காட் ஆப் லப்’ படத்தை இயக்க உள்ளார். இதனிடையே அவர் அடுத்தடுத்து 3 படங்களை இயக்கவிருப்பதாக செய்திகள் பரவி வந்தன. ஆனால் இவ்வாறு வதந்திகளைப் பரப்பவேண்டாம் என இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
News March 22, 2025
ரூ.58 கோடி… பரிசுத் தொகையை பங்கு போடுவது எப்படி?

சாம்பியன் டிராபி வென்ற இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசுத் தொகையை பிசிசிஐ அறிவித்தது. அதன்படி, ஒவ்வொரு வீரருக்கும், தலைமைப் பயிற்சியாளர் கம்பீருக்கும் தலா ரூ.3 கோடி வழங்கப்பட உள்ளது. பிற பயிற்சியாளர்கள், ஊழியர்களுக்கு தலா ரூ.50 லட்சம் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பிசிசிஐ அதிகாரிகளுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
News March 22, 2025
பத்திரப்பதிவு அலுவலகங்கள் நாளை திறந்திருக்கும்

மார்ச் மாதம் முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு சனிக்கிழமை விடுமுறை கிடையாது, வழக்கம் பாேல செயல்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி, கடந்த 3 வாரங்களும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறக்கப்பட்டு வழக்கம்போல செயல்பட்டன. அதன்படி, நாளையும் பத்திரப்பதிவு அலுவலகங்கள் திறந்திருக்கும். பத்திரப்பதிவும் வழக்கம் போல நடைபெறும். இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.