News March 14, 2025
நடிகையின் ஜாமின் மனு தள்ளுபடி

துபாயில் இருந்து விமானத்தில் தங்கம் கடத்தியதாக கைதான நடிகை ரன்யா ராவ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தனக்கு ஜாமின்கோரி, பொருளாதார குற்றங்களுக்கான கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இதை இன்று பரிசீலித்த கோர்ட், மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது எனக் கூறி தள்ளுபடி செய்தது. இந்த வழக்கில் 2ஆவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள தருண் கொண்டுருவின் ஜாமின் மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
Similar News
News March 15, 2025
தமிழ் படங்களை ஹிந்தியில் டப் செய்ய வேண்டாம்: பவன்

தமிழ்நாட்டின் ஹிந்தி எதிர்ப்பை பவன் கல்யாண் விமர்சித்துள்ளார். தமிழ் படங்களை ஏன் ஹிந்தியில் டப் செய்து வெளியிடுகிறீர்கள் என கேள்வி எழுப்பிய அவர், வடமாநிலங்களின் காசு மட்டும் வேண்டும், ஆனால் அவர்களின் மொழி வேண்டாமா எனவும் அவர் வினவியுள்ளார். ஒரு மொழிக்கு எதிராக ஏன் பாரபட்சம் காட்டப்படுகிறது எனவும், சமஸ்கிருதமும், ஹிந்தியும் நமது தேசத்தின் மொழிகள் அல்லவா எனவும் தெரிவித்துள்ளார்.
News March 15, 2025
‘ராட்சசன்’ இயக்குநர் அடுத்த படம் நாளை அறிவிப்பு

இயக்குநர் ராம்குமாரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு நாளை காலை 10 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. ‘ராட்சசன்’ படத்தைத் தொடர்ந்து தனுஷை வைத்து ராம்குமார் புதிய படம் இயக்குவதாக இருந்தது. இதற்காக 2 ஆண்டுகள் அவர் காத்திருந்த நிலையில், தனுஷ் திடீரென நடிக்க மறுத்தார். அதையடுத்து SK, விஷ்னு விஷாலிடம் அந்த கதையில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
News March 15, 2025
சிறப்பு கொள்முதல் முறை… ரத்து செய்தது டாஸ்மாக்

குடோன்களில் இருப்பு நிலவரத்தை வைத்து மாவட்ட மேலாளர்களே மதுபான நிறுவனங்களுக்கு ஆர்டர்கள் கொடுக்கும் சிறப்பு கொள்முதல் முறையை டாஸ்மாக் நிர்வாகம் தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. விற்பனையை அடிப்படையாக வைத்து இனி கொள்முதல் செய்யவும் முடிவு செய்துள்ளது. போதிய வரவேற்பு இல்லாத போதும் சில மதுபான நிறுவனங்களுக்கு அதிக ஆர்டர்கள் தரப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.