News August 8, 2024
200 பேருக்கு அன்னதானம் செய்த நடிகை ஆத்மிகா

நடிகை ஆத்மிகா 200 பேருக்கு அன்னதானம் வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சோழிங்கநல்லூர் பிரத்தியேங்கிரா தேவி கோயிலில் அவர் அன்னதானம் வழங்கினார். இதுகுறித்து கூறிய ஆத்மிகா, உடல், வேலை, மனதை சரி செய்ய இதுபோல அன்னதானம் செய்து இறைவனிடம் சரணடைவதாகவும், இது நினைத்து பார்க்க முடியாத உற்சாகத்தை தருவதாகவும், கொடுத்து உதவுவது மட்டுமே அதிக மகிழ்ச்சி அளிக்கும் என்றும் தெரிவித்தார்.
Similar News
News December 3, 2025
திருப்பூர் மக்களே உஷார்: கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் வடகிழக்குப்பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் சில இடங்களில், கடந்த சில தினங்களாக அவ்வப்போது கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (டிச.03), திருப்பூர் மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு ஏற்றார்போல், பொதுமக்கள் தங்கள் பயணத்தை, திட்டமிட்டுக்கொள்வது நல்லது.
News December 3, 2025
Cinema 360°: ₹62.47 கோடி வசூலித்த தனுஷின் இந்தி படம்

*அனுபமாவின் ‘லாக்டவுன்’ படத்திற்கு U/A சான்றிதழ் தரப்பட்டுள்ளது *தனுஷின் ‘தேரே இஷ்க் மே’ இந்தியாவில் மட்டும் இதுவரை ₹62.47 கோடி வசூலித்துள்ளதாக அறிவிப்பு *திவ்ய பாரதி நடித்துள்ள ‘GOAT’ டீசர் வெளியாகியுள்ளது. *அவெஞ்சர்ஸ்: டூம்ஸ் டே டீசர் டிச.7-ம் தேதி ரிலீசாகிறது. *பசுபதியின் ‘குற்றம் புரிந்தவன்’ வெப் தொடர் டிச.5 முதல் சோனி லைவ் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது.
News December 3, 2025
சிரஞ்சீவியை போல் விஜய் சறுக்குவார்: தமிழருவி மணியன்

அதிமுக அணியில் தவெக இடம்பெற EPS-ஐ CM வேட்பாளராக விஜய் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தமிழருவி மணியன் கூறியுள்ளார். இதற்கு வாய்ப்பில்லை என்ற அவர், இதனால் கூட்டணி அமையவும் வாய்ப்பு கிடையாது என தெரிவித்துள்ளார்.. மேலும், எப்படி ஆந்திராவில் சிரஞ்சீவி ஒரு அனுபவத்தைப் பெற்றாரோ அதே அனுபவத்தை விஜய் பெறுவார் எனவும், சிரஞ்சீவியை போல் கண்டிப்பாக சறுக்குவார் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.


