News January 23, 2025

நடிகை எமி ஜாக்சன் கர்ப்பம்

image

மதராசப்பட்டினம், ஐ போன்ற படங்களில் நடித்த எமி ஜாக்சன், கர்ப்பம் தரித்திருக்கிறார். இது தொடர்பான அறிவிப்பை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் அவர், போட்டோக்களையும் பகிர்ந்திருக்கிறார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி பிரிட்டிஷ் நடிகர் எட் வெஸ்ட்விக்-ஐ எமி இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஏற்கெனவே இவருக்கு முதல் திருமணத்தில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

Similar News

News November 23, 2025

மஞ்சள் கலந்து நீர் குடிப்பதால் இத்தனை நன்மைகளா?

image

*மஞ்சள் நீர் குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
*அஜீரணம், நெஞ்செரிச்சல், வாயு போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு மஞ்சள் கலந்த வெந்நீர் குடிப்பது நல்லது என கூறுகின்றனர். *கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இது நல்லதாம். *ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தவும் இந்த நீர் உதவுவதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

News November 23, 2025

NATIONAL 360°: துப்பாக்கி வெடித்து காவலர் பலி

image

*ஹரியானாவில் 18 வயது பூர்த்தியாகாத நபர் ஓட்டிய கார் மோதியதில் 8 வயது சிறுவன் பலியான சோகம். *குஜராத்தில் 2-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு, பள்ளி வளாகத்தில் பாலியல் வன்கொடுமை செய்த நபரை தேடி வரும் போலீசார். *ஜார்க்கண்டில் தனது துப்பாக்கியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வெடித்ததில் காவலர் பலி. *மகாராஷ்டிரா DCM அஜித் பவாரின் பாதுகாப்பு வாகனம் மோதியதில் 4 பேர் காயம்.

News November 23, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: சுற்றந்தழால் ▶குறள் எண்: 527
▶குறள்:
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்.
▶பொருள்: அனைத்து மக்களும் சமம் எனினும், அவரவர்க்குரிய ஆற்றலுக்கேற்ப அவர்களைப் பயன்படுத்திக் கொண்டால், அந்த அரசை அனைவரும் அரணாகச் சூழ்ந்து நிற்பர்.

error: Content is protected !!