News March 15, 2025
DRI அதிகாரிகள் அடித்தனர்.. நடிகை குற்றச்சாட்டு

வருவாய் புலனாய்வு இயக்குநரக (DRI ) அதிகாரிகள் 15 முறை அடித்ததாக தங்கக் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவ் குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த வாரம் தங்கம் கடத்தியதை ஒப்புக் கொண்ட அவர், அதனை மறுத்து ஏடிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளார். கட்டாயப்படுத்தி 50-60 பக்கத்தில் கையெழுத்து வாங்கினர், அதில் 40 பக்கம் வெற்று காகிதம், அடித்த அதிகாரியை அடையாளம் காட்ட முடியும் என தெரிவித்துள்ளார்.
Similar News
News July 4, 2025
BREAKING: அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்

ஈட்டிய விடுப்பில் 15 நாள்கள் வரை அக்.1 முதல் சரண் செய்து பணப் பயன் பெற்றுக்கொள்ளலாம் என TN அரசு அறிவித்துள்ளது. 2026-ம் ஆண்டு ஏப்.1 முதல் அமலாகும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே (அக்.1 முதல்) ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம் சுமார் 8 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பயன்பெறுவர். இதற்காக ஆண்டுக்கு ₹3,561 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்யும்.
News July 4, 2025
One Last time.. ராஜஸ்தானை உலுக்கிய தற்கொலை

தனது 8 வயது மகனுக்கு துப்பட்டா அணிவித்து, நெற்றியில் குங்குமமிட்டு, தங்க நகைகளையும் போட்டு போட்டோ எடுத்துள்ளார். பின்னர், சிறுவன் உள்பட இக்குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் தண்ணீர் டேங்கில் விழுந்து தற்கொலை செய்துள்ளனர். போலீஸ் விசாரணையில் நிலத்தகராறு இருந்தது தெரியவந்துள்ளது. மேலும், தனக்கு பெண் பிள்ளை இல்லாததால் இளைய மகனை பெண்ணாக கடைசியாக அழகு பார்த்துள்ளார் தாய். இது ராஜஸ்தானில் நிகழ்ந்துள்ளது.
News July 4, 2025
₹853 கோடி சம்பளம் வாங்கும் இந்திய வம்சாவளி

IIT கான்பூரில் பட்டம் பெற்றவர் திரபித் பன்சால். இந்திய வம்சாவளியான இவர், மெட்டா நிறுவனத்தின் AGI பிரிவில் பணியமர்த்தப்பட்டுள்ளார். இவருடைய ஆண்டு சம்பளத்தைக் கேட்டால் தலையே சுற்றிவிடும். ஆண்டுக்கு ₹853 கோடி சம்பளம் கொடுக்கப்படுகிறதாம். இதற்கு முன்னதாக பெங்களூரு இந்திய ஆராய்ச்சி நிறுவனம், பேஸ்புக், கூகுள் & மைக்ரோசாஃப்ட் ஆகிய நிறுவனங்களிலும் அவர் பயிற்சிப் பணி பெற்றுள்ளார்.