News March 9, 2025
நடிகை அபிநயாவுக்கு நிச்சயதார்த்தம்!

பிரபல நடிகை அபிநயாவுக்கு இன்று நிச்சயதார்த்தம் நடந்தது. தனது வருங்கால கணவரும், தானும் நிச்சயதார்த்தம் முடிந்து, கோயிலில் மணி அடிக்கும் அழகிய புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். தனது பால்யப் பருவ நண்பரை விரைவில் திருமணம் முடிக்கப் போவதாக அண்மையில் பேட்டியொன்றில் அவர் கூறியிருந்தார். நடிகை அபிநயாவுக்கு வாய் பேச முடியாது மற்றும் காதும் கேட்காது என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 10, 2025
ராகுல் உதவியால் தொழிலதிபர் ஆகும் தொழிலாளி

ராகுல் காந்தி செய்த தொடர் உதவியால் செருப்பு தைக்கும் தொழிலாளி, தொழிலதிபராக உள்ளார். உ.பி. சுல்தான்பூரில் உள்ள தொழிலாளி ராம்செட்டின், செருப்பு கடைக்கு கடந்தாண்டு ஜூலை மாதத்தில் சென்று ராகுல் உரையாடினார். தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு அவரை தோல்பொருள் வியாபாரியிடம் அறிமுகம் செய்து வைத்தார். இதைத்தொடர்ந்து, ‘ராம்செட் மோச்சி’ என்ற பெயரில் புதிய காலணி பிராண்டை அந்த நபர் பெற உள்ளார்.
News March 10, 2025
CUET PG நுழைவு சீட்டு வெளியீடு

மத்திய பல்கலைக்கழக முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான CUET தேர்வுக்கான நுழைவுச் சீட்டு வெளியாகியுள்ளது. முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான CUET நுழைவுத் தேர்வுக்கு 4,12,024 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு வரும் மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்.1ஆம் தேதி வரை கணினி வழியில் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான நுழைவுச் சீட்டை <
News March 10, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: தீவினையச்சம் ▶குறள் எண்: 202 ▶குறள்: தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும். ▶பொருள்: தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையனவாக இருத்தலால், அத் தீயச் செயல்கள் தீயைவிடக் கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்..