News March 23, 2024
கமல் படத்திலிருந்து விலகிய நடிகர்கள்?

நீண்ட இடைவெளிக்குப் பின் மணிரத்னம் இயக்கத்தில் கமல் ‘ThugLife’ படத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன், த்ரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி ஆகியோரும் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு வெளிநாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் இருந்து துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி இருவரும் விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், படக்குழு இதுகுறித்து ஏதும் அறிவிக்கவில்லை.
Similar News
News April 28, 2025
மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் மனோ தங்கராஜ்

மனோ தங்கராஜ்-ஐ அமைச்சராக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 7 மாதங்கள் கழித்து மீண்டும் அமைச்சராக அவர் பதவியேற்றுள்ளார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் CM ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
News April 28, 2025
77 நீதிபதிகள் பணியிட மாற்றம்

மாவட்ட நீதிபதிகள் 77 பேரை பணியிட மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்ற தலைமை பதிவாளர் அல்லி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மே 13-ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என நீதிபதி நந்தினி தேவி காலையில் அறிவித்த நிலையில், மாலையில் அவர் மாற்றப்பட்டுள்ளார்.
News April 28, 2025
3 குழந்தைகளுக்கு தாயான ஸ்ரீலீலா…. குவியும் பாராட்டு

தெலுங்கில் முன்னணி நடிகையான ஸ்ரீலீலா தற்போது சிவகார்த்திகேயனுடன் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார். இவர் 2022-ல் 2 மாற்றுத்திறனாளி குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில், 3-வதாக ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்துள்ளதாக ஸ்ரீலீலா தெரிவித்துள்ளார். அக்குழந்தையை முத்தமிடும் புகைப்படத்தை அவர் இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அவரின் தாய் உள்ளத்துக்கு பாராட்டுகள் குவிகின்றன.