News August 6, 2024
நடிகர்களின் சம்பளம் குறைகிறது?

நடிகர்களின் சம்பளத்தை குறைக்கும் வகையில் புதிய திட்டத்தை தயாரிப்பாளர் சங்கம் கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தியேட்டர் ரிலீஸ், OTT உரிமம் அடிப்படையில் நடிகர்கள் சம்பளம் பெறும் நிலையில், படத்தின் வசூலைப் பொறுத்து அதிக சம்பளம் பெறுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், வரும் காலங்களில் தியேட்டர் வசூல் அடிப்படையில் சம்பளத்தை நிர்ணயிக்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News December 9, 2025
BREAKING: விஜய் கூட்டத்தில் போலீசார் தடியடி

புதுச்சேரியில் விஜய் பங்கேற்க உள்ள பொதுக்கூட்டத்தின் ஒரு பகுதியில் கடும் நெரிசல் ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைக்கும் சூழல் உருவானது. ஒரு பாஸுக்கு 2 பேருக்கு அனுமதி என தவெக நிர்வாகிகள் கூறியதாகவும், ஆனால் ஒரு பாஸுக்கு ஒருவருக்கு மட்டுமே அனுமதி என போலீசார் கூறியதால் பலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவுகிறது.
News December 9, 2025
BREAKING: தங்கம் விலை அதிரடியாக குறைந்தது

தங்கம் விலை இன்று(டிச.9) சவரனுக்கு ₹320 குறைந்துள்ளது. 22 கேரட் கிராமுக்கு ₹40 குறைந்து ₹12,000-க்கும், சவரன் ₹96,000-க்கும் விற்பனையாகிறது. அதேநேரம், வெள்ளியின் விலை கிராமுக்கு ₹1 உயர்ந்து ₹199-க்கும், பார் வெள்ளி கிலோவுக்கு ₹1,000 உயர்ந்து ₹1,99,000-க்கும் விற்பனையாகிறது.
News December 9, 2025
கவர்னர் மீண்டும் டெல்லி விசிட்!

கவர்னர் RN ரவி, மீண்டும் டெல்லிக்கு சென்றுள்ளார். அங்கு மத்திய அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை சந்தித்துவிட்டு, நாளை சென்னை திரும்புகிறார். சித்த மருத்துவ பல்கலை., மசோதாவை ஜனாதிபதிக்கு கவர்னர் நேற்று அனுப்பியிருந்தார். அடிக்கடி கவர்னர் டெல்லி சென்று வரும் நிலையிலும், திமுக அரசுடன் தொடர் மோதல் போக்கு நிலவிவரும் நிலையிலும், அவரது பயணம் கவனம் பெற்றுள்ளது.


