News August 4, 2024

நடிகர்கள் சிரஞ்சீவி, ராம்சரண் ₹1 கோடி நிதியுதவி

image

வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்காக, நடிகர்கள் சிரஞ்சீவி, ராம்சரண் ₹1 கோடி வழங்கியுள்ளனர். இது தொடர்பாக Xஇல் பதிவிட்டுள்ள சிரஞ்சீவி, இந்த சம்பவம் தனக்கு மிகுந்த வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியுள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் நலம்பெற பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார். வயநாடு நிலச்சரிவில் இதுவரை 350க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

Similar News

News April 7, 2026

ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு நிறுத்தம்

image

சென்னை வில்லிவாக்கத்தில் போட்டியிடும் தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜுனாவின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பிரமாண பத்திரத்தில் வருமானம், சொத்து & நிறுவனம் தொடர்பான தகவலை மறைத்ததாக திமுகவினர் புகார் தெரிவித்ததால், அவரின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழிசையின் கடும் எதிர்ப்பால், மயிலாப்பூரில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மயிலை வேலுவின் வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

News April 7, 2026

திருமணம் சர்ச்சை.. த்ரிஷா பரபரப்பு பதிவு!

image

சினிமாவிலிருந்து விலகும் முடிவில் த்ரிஷா உள்ளதாக SM-களில் தகவல் பரவியது. இந்நிலையில், கோபத்துடன் த்ரிஷா பதிவிட்ட இன்ஸ்டா ஸ்டோரி வைரலாகிறது. அதில், நான் சினிமாவை விட்டுவிட்டேன். ஒரு தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டேன், 2 வயதுடைய 4 குழந்தைகளை வளர்த்து வருகிறேன் போல. இன்றைய பொய் கதைக்கான அளவு போதுமா? (அ) இன்னும் ஏதேனும் சேர்க்க வேண்டுமா என்று கேட்டு, வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

News April 7, 2026

தமிழன் பிரசன்னா வேட்புமனு ஏற்பதில் குழப்பம்

image

கொளத்தூரில் போட்டியிடும் திமுக தலைவர் ஸ்டாலினின் வேட்புமனு ஏற்பட்டுள்ளது. அதேபோல், தருமபுரியில் சௌமியா அன்புமணி, சேப்பாக்கத்தில் உதயநிதி, மயிலாப்பூரில் தமிழிசை, காட்பாடியில் துரைமுருகன், தி.நகரில் புஸ்ஸி ஆனந்த், சாத்தூரில் நயினார் ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. ஆனால், எழும்பூர் தொகுதி திமுக வேட்பாளர் தமிழன் பிரசன்னா வேட்புமனுவை ஏற்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் சலசலப்பு நிலவி வருகிறது.

error: Content is protected !!