News August 22, 2025
நடிகர்கள் கலைக்கான கருவி மட்டுமே: ஷ்ருதிஹாசன்

ஷூட்டிங் ஸ்பாட்டில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற விதிமுறைகள் தென்னிந்திய சினிமாவில் உண்டு என ஷ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். பாலிவுட்டை ஒப்பிடுகையில் தென்னிந்திய சினிமாவில் நிறைய பணம் இருந்தாலும் ஆடம்பர ஆடை அணிய மாட்டார்கள், பலர் இன்றும் அம்பாசிடர் கார்களையே பயன்படுத்துகின்றனர் எனக் கூறியுள்ளார். மேலும், நடிகர்களாகிய நாம் கலைக்கான ஒரு கருவி மட்டுமே என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.
Similar News
News March 24, 2026
எரிசக்தி இறக்குமதியை விரிவுபடுத்தியுள்ளோம்: PM

நாட்டில் எரிசக்தி விநியோகம் சீராக இருப்பதாக PM மோடி தெரிவித்தார். இந்தியா தனது LPG தேவைகளில் கிட்டத்தட்ட 60%-ஐ இறக்குமதி செய்வதாகவும், கடந்த 11 ஆண்டுகளில் எரிசக்தி இறக்குமதியை 27 நாடுகளில் இருந்து 41 நாடுகளாக விரிவுபடுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், அவசர காலத்துக்கான பெட்ரோலிய இருப்பு 53 லட்சம் மெட்ரிக் டன் உள்ளதாகவும், அவற்றை 65 லட்சமாக விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
News March 24, 2026
தேர்தலில் கம்யூனிஸ்ட் கரைந்த கதை

1989 முதல் பெரும்பாலான சட்டப்பேரவை தேர்தல்களில் இரட்டை இலக்கத்தில் களம் கண்ட CPM, தற்போது தொடர்ந்து 2-வது முறையாக ஒற்றை இலக்கத்தில் போட்டியிடுகிறது. 1989-21( திமுக+), 1991-22(திமுக+), 1996-40(மதிமுக+), 2001-8(அதிமுக+), 2006-13(திமுக+), 2011-12(அதிமுக+), 2016-25( மக்கள் நலக்கூட்டணி), 2021-6(திமுக+), 2026-5(திமுக+). கடந்த தேர்தலை விட இம்முறை ஒரு சீட் குறைக்கப்பட்டது பற்றி உங்க கருத்து?
News March 24, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 24) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் போட்டோ அனுப்புங்க.


