News April 16, 2025

GBU-வில் நடிக்க மறுத்த நடிகர்

image

‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித்தின் மகனாக நடிக்க தனக்கு வாய்ப்பு வந்ததாக ‘பிரேமலு’ பட ஹீரோ நஸ்லேன் தெரிவித்துள்ளார். ஆனால் அந்த நேரத்தில் ‘ஆலப்புழா ஜிம்கானா’ படத்தில் நடித்து வந்ததாகவும், அதன் காரணமாக GBU படத்தில் நடிக்க தேதி ஒதுக்க முடியாமல் போனதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பல்வேறு எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும், தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ₹100 கோடியை தாண்டி வசூலித்துள்ளது.

Similar News

News January 17, 2026

ஜனவரி 17: வரலாற்றில் இன்று

image

*1706 – அமெரிக்க விஞ்ஞானி பெஞ்சமின் ஃபிராங்கிளின் பிறந்தார். *1773 – இங்கிலாந்து கப்பல் கேப்டன் ஜேம்ஸ் குக் அண்டார்க்டிக்காவை அடைந்தார். *1917 – தமிழக முன்னாள் CM எம்.ஜி. ஆர் பிறந்தார். *1942 – அமெரிக்க குத்து சண்டை வீரர் முகம்மது அலி பிறந்தார். *2010 – மேற்கு வங்கத்தின் முன்னாள் CM மற்றும் CPM கட்சியின் முக்கிய தலைவரான ஜோதி பாசு காலமானார்.

News January 17, 2026

இந்தியாவில் மோசமான சூழல்: டென்மார்க் வீராங்கனை

image

காற்று மாசுபாடு, மோசமான ஏற்பாடு ஆகிய காரணங்களால் டெல்லியில் நடக்கும் <<18857250>>இந்திய பேட்மிண்டன் ஓபனை<<>> சர்வதேச வீரர்கள் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், டென்மார்க் வீராங்கனை மியா பிலிச்ஃபெல்ட், இந்தியாவில் எதிர்பார்த்ததை விட மிக மோசமான சூழலை எதிர்கொள்ள நேர்ந்ததாக அதிருப்தி தெரிவித்துள்ளார். ஒரு சர்வதேச போட்டிக்கு இதுபோன்ற மோசமான ஏற்பாடுகளை ஏற்றுக் கொள்ளவே முடியாது என்றும் கூறியுள்ளார்.

News January 17, 2026

முகமது அலி பொன்மொழிகள்

image

*அடித்து வீழ்த்தப்பட்டால் நீங்கள் தோற்கமாட்டீர்கள். கீழேயே இருந்தால் நீங்கள் தோற்றுவிடுவீர்கள். *நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள். *ஆபத்துக்களை எதிர்கொள்ளத் தைரியம் இல்லாதவர்கள், வாழ்க்கையில் எதையும் சாதிக்க மாட்டார்கள். *நான் தான் வெல்லப் போகிறேன் என்ற மன உறுதியுடன் ஒருவன் இருக்கும் போது, அவனை வெல்வது கடினம். *என் வலுவான எதிராளி எப்பொழுதும் நான்தான்.

error: Content is protected !!