News May 21, 2024

சென்னை வந்தடைந்தார் நடிகர் விஜய்

image

‘G.O.A.T’ படத்திற்கான VFX பணிகளை முடித்துவிட்டு, நடிகர் விஜய் சென்னை திரும்பியுள்ளார். இப்படம், வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளதால், இறுதிக்கட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதே சமயம், 10, +2 வகுப்பு பொதுத் தேர்வில் சாதித்த மாணவர்களை சந்திக்கும் ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. விஜய்யின் டப்பிங் பணிகள் 50% முடிந்துவிட்ட நிலையில், விரைவில் படப்பிடிப்பும் நிறைவுபெற உள்ளது.

Similar News

News February 20, 2026

திருவள்ளூர்: உங்களிடம் செல்போன் உள்ளதா? ALERT

image

திருவள்ளூரில் அதிகரித்து வரும் நெரிசல், திருடர்களுக்கு செல்போன்களை திருட மிகவும் சௌகர்யமாக மாறியுள்ளது. இந்நிலையில், உங்கள் போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி (அ) இணையதளத்தை<> கிளிக் செய்து <<>>செல்போன் நம்பர், IMEI, தொலைந்த நேரம், இடம் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம்! உடனே Phone Switch Off ஆகிவிடும். உங்கள் Phone-யை இதன்மூலம் Easy-ஆக கண்டுபிடிக்கலாம்

News February 20, 2026

BREAKING: திமுகவுக்கு ஓபிஎஸ் ஆதரவு கொடுத்தார்

image

திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று திமுக கூட்டணிக்கு ஆதரவாக OPS பேசியுள்ளது அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. CM ஸ்டாலினை 2-வது முறையாக சந்தித்தபின் OPS செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுகவின் 5 ஆண்டுகால சாதனைகள் மக்கள் மனதில் நிலைத்திருக்கின்றன. தற்போதைய அரசியல் சூழல், ஸ்டாலினின் சிறப்பான 5 ஆண்டுகால ஆட்சி காரணமாக திமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

News February 20, 2026

துரைமுருகன் இடத்தில் அன்பில் மகேஸ்.. என்ன ஆச்சு?

image

சட்டப்பேரவை கடைசி கூட்டத்தொடரின் இறுதிநாளான இன்று அவை முன்னவர் துரைமுருகன் இருக்கையில் அன்பில் மகேஸ் அமர்ந்திருந்தார். உடல் நலக்குறைவால் இன்றைய கூட்டத்தில் துரைமுருகன் பங்கேற்காத நிலையில், காலியாக இருந்த அவ்விருக்கையில் அன்பில் அமரவைக்கப்பட்டார். ஆனால், சீனியர்கள் பலர் இருக்கும் போது, அவை முன்னவர் அமர்ந்த இருக்கையில் ஜூனியர் அமைச்சர் ஒருவரை உட்காரவைத்தது ஏன் என கேள்வி எழுந்துள்ளது.

error: Content is protected !!