News May 21, 2024

நடிகர் சூரி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு

image

காமெடி நடிகர்களை குறைத்து மதிப்பிடாதீர்கள் என நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். கருடன் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய அவர், சீரியஸான கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்களால் நகைச்சுவையான கதாபாத்திரங்களில் நடிக்க முடியாது என்றும், ஆனால், காமெடி நடிகர்களால் எவ்வளவு சீரியஸான கதாபாத்திரங்களிலும் நடிக்க முடியும் என்றும் தெரிவித்தார். மேலும், நடிகர் சூரி அதற்கு ஒரு எடுத்துக்காட்டு என பாராட்டினார்.

Similar News

News February 20, 2026

வெள்ளி விலை 10 நாள்களில் ₹60,000 குறைந்தது

image

தங்கம் விலை இன்று சவரனுக்கு ₹640 குறைந்தாலும், வெள்ளி விலையில் மாற்றமில்லாமல் 1 கிராம் ₹270-க்கு விற்பனையாகிறது. அதேநேரம், பிப்.11 – 20 வரையிலான 10 நாள்களில் 1 கிராம் ₹60-ம், 1 கிலோ ₹60,000 குறைந்துள்ளது. இதனால் வெள்ளி நகைப் பிரியர்கள் மனமகிழ்ச்சி அடைந்துள்ளனர். வரும் நாள்களிலும் விலை குறையும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.

News February 20, 2026

அமைச்சர் KN நேரு மீது வழக்கு பதிவு செய்ய கோர்ட் உத்தரவு

image

அமைச்சர் KN நேரு மீது உடனடியாக FIR பதிவு செய்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை HC உத்தரவிட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமன முறைகேடு நடந்ததாக டிஜிபிக்கு ED கடிதம் எழுதியிருந்தது. அதன் அடிப்படையில் KN நேரு மீது FIR பதிவு செய்யக்கோரிய அதிமுக MP இன்பதுரையின் மனு மீது தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி வழக்கில் சிக்கி சிறை சென்றிருந்தார்.

News February 20, 2026

பதவி பவுசுக்காக பல்லை இளிக்ககூடியவன் அல்ல: திருமா

image

இந்தியாவிலேயே மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிதான் கட்டுக்கோப்பான கூட்டணி என திருமா கூறியுள்ளார். இந்த கூட்டை கட்டுக்கோப்பாக இருக்க விசிகவும் முதன்மையான காரணம் என்ற அவர், ஒரு சராசரி அரசியல்வாதியாக இருந்திருந்தால் பதவி பவுசுக்காக பல்லை இளிக்ககூடியவனாக இருந்திருந்தால் TN அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்க முடியும் என பேசியுள்ளார். ஆனால் அந்த நிலை துளியும் விசிகவிடம் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!