News August 28, 2025

மேடையில் நடிகருக்கு மாரடைப்பு.. கவலைக்கிடம்!

image

கேரள மாநிலம் கொச்சியில் நடந்த நிகழ்ச்சியில் மேடையில் பேசிக் கொண்டிருந்த போது, மலையாள நடிகர் ராஜேஷ் கேஷவ்விற்கு(47) திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. கீழே சரிந்து விழுந்த அவர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பியூட்டிஃபுல், திருவனந்தபுரம் லாட்ஜ், ஹோட்டல் கலிஃபோர்னியா உள்ளிட்ட பல படங்களில் ராஜேஷ் நடித்துள்ளார்.

Similar News

News August 28, 2025

ஆன்லைனில் பொருள்களை வாங்காதீர்கள்: H.ராஜா

image

USA, இந்தியாவுக்கு விதித்த கூடுதல் வரி விதிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் ஜவுளித்துறை பெரும் பாதிப்பைச் சந்திப்பதாக தொழில் வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஆன்லைனில் பொருள்கள் வாங்குவதை தவிர்த்து, அருகில் உள்ள கடைகளில் பொருள்களை மக்கள் வாங்க வேண்டும் என்று H.ராஜா கூறியுள்ளார். ஆனால் இது டிஜிட்டல் இந்தியாவை பாதிக்காதா? என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.

News August 28, 2025

தொப்பையை குறைக்கும் நௌகாசனம்!

image

✦ரத்த ஓட்டத்தை சீராக்கி, தொப்பையை குறைக்க உதவுகிறது.
➥தரையில் கால்களை நீட்டி, முதுகு நேராக இருக்கும்படி அமரவும்.
➥உடலை சற்று பின்னால் சாய்த்து கொண்டே, கால்களை வளைக்காமல் தரையிலிருந்து சுமார் 45 Degree உயர்த்தவும்.
➥கைகளை கால்களுக்கு மேல் நீட்டியபடி வைக்கவும். உங்கள் உடலை ஒரு படகு வைக்கவும்.
➥இந்த நிலையில் 15- 20 வினாடிகள் வரை இருந்து விட்டு, மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும். SHARE IT.

News August 28, 2025

பள்ளிகளில் ஆதார் முகாம்கள் நடத்த உத்தரவு

image

பள்ளிக் குழந்தைகளுக்கான ஆதார், ‘பயோ மெட்ரிக்’ அடையாளத்தை புதுப்பிக்க முகாம்களை கட்டாயமாக நடத்தும்படி மாநில அரசுகளுக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம்(UIDAI) அறிவுறுத்தியுள்ளது. இதற்காக பள்ளிகளுக்கு என பிரத்யேக செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதில், 5 – 15 வயது வரையிலான பள்ளி குழந்தைகளின் கைரேகை, மற்றும் கண் கருவிழிப் படலம் பதிவு செய்து புதுப்பிக்கப்பட உள்ளது.

error: Content is protected !!