News December 15, 2024
இயக்குநராகும் நடிகர் சூரி..!

நடிகர் சூரி விரைவில் படம் இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். தனது அப்பா முத்துச்சாமி மற்றும் அம்மா சேங்கையரசியின் வாழ்க்கையை படமாக இயக்க உள்ளதாக கூறியுள்ளார். இதை கூறும்போது சாதாரணமாக தெரியும், ஆனால், ஷேர் பண்ணுவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். 6 பிள்ளைகளை வளர்க்க பெற்றோர் பெற்ற கஷ்டத்தை படமாக்க வேண்டும் என்பது சூரியின் நீண்டநாள் கனவு.
Similar News
News September 15, 2025
AI மூலம் 8% பொருளாதார வளர்ச்சி: மத்திய அரசு

Nano Banana என்று பொதுமக்கள் வரை பலரும் இன்று AI பயன்படுத்த துவங்கிவிட்டனர். இந்நிலையில், ‘வளர்ச்சியடைந்த பாரதம் 2047’ என்ற இலக்கில், 8%-க்கும் மேலான பொருளாதார வளர்ச்சியை AI உருவாக்கும் என மத்திய அரசின் நிதி ஆயோக் அறிக்கை கூறியுள்ளது. குறிப்பாக, நிதி மற்றும் உற்பத்தி சார்ந்த துறைகளில் AI அதிகளவு பயன்படுத்தப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் பயன்படுத்தும் AI கருவி எது?
News September 15, 2025
இன்றிரவு 12 மணிக்குள் இதை செய்யுங்கள்

வருமானவரி கணக்கு தாக்கல் (IT Returns) செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. காலக்கெடு மேலும் நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றே கடைசி என வருமானவரித் துறை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. ஆகவே, உங்கள் கணக்கை இன்றிரவு 12 மணிக்குள் <<17715443>>தாக்கல்<<>> செய்துவிடுங்கள். தவறினால் <<17712332>>₹5,000 அபராதம்<<>> செலுத்த வேண்டியிருக்கும். இதுவரை 6.7 கோடி பேர் தங்கள் IT Returns-ஐ தாக்கல் செய்துள்ளனர்.
News September 15, 2025
தன்பாலின ஈர்ப்பாளர்களுக்காக கோபப்பட்ட மோகன்லால்

மலையாள பிக்பாஸில் தன்பாலின ஜோடி பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், இவர்களை போன்றோரை தங்கள் வீட்டிற்குள்ளே விடமாட்டோம் என்று சக பெண் போட்டியாளர்கள் கூறினர். ஆனால், அவர்களுக்கான அங்கீகாரத்தை கோர்ட்டே கொடுத்துள்ளபோது, இப்படி கூற உங்களுக்கு என்ன உரிமையுள்ளது? என தொகுப்பாளரான மோகன்லால் கோபமாக கேட்டார். இவர்களை தன் வீட்டுக்குள் அனுமதிப்பேன் என்றும் கூறிய அவரது கருத்துக்கு பலரும் ஆதரவளித்து வருகின்றனர்.