News August 5, 2025

நடிகர் ஷா நவாஸ் பிரேம் நசீர் காலமானார்!

image

பிரபல மலையாள நடிகர் ஷா நவாஸ் பிரேம் நசீர்(71) கிட்னி பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். மலையாள சினிமாவின் ஜாம்பவான் பழம்பெரும் நடிகர் பிரேம் நசீரின் மகன் இவர். 1977 முதல் மலையாள மொழி படங்களில் நடித்து வந்த ஷா நவாஸ் கடைசியாக 2022-ல் வெளியான ‘ஜன கன மன’ படத்தில் நடித்திருந்தார். தமிழில் வெளியான ‘ஜாதி பூக்கள்’ (1987) படத்தில் இவர் நாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News August 5, 2025

மகளிர் உரிமைத் தொகை.. விண்ணப்பத்தின் நிலை என்ன?

image

ஜூலை 15 முதல் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு லட்சக்கணக்கான பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களது விண்ணப்பங்களின் நிலையை அறிய அரசு ஏற்பாடு செய்துள்ளது. kmut.tn.gov.in என்ற இணைய பக்கத்திற்கு சென்று உங்களது ஆதார் எண்ணை உள்ளிடவும். ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு OTP வரும். அதனை உள்ளிட்டு உங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா? என அறியலாம். SHARE IT.

News August 5, 2025

ஆபரேஷன் சிந்தூரை பாராட்டி NDA தீர்மானம்

image

இன்று நடந்த NDA கட்சிகள் கூட்டத்தில் ஆபரேஷன் சிந்தூர், ஆபரேஷன் மகாதேவ் ஆகியவற்றை பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக நடத்தப்பட்ட இந்த நடவடிக்கைகளில், நம் பாதுகாப்புப் படையினர் வெளிப்படுத்திய வீரம், அர்ப்பணிப்பை பாராட்டியும், தீவிரவாதிகள் மீது சமரசமின்றி சரியான பதிலடி கொடுக்க உறுதியாக செயல்பட்ட PM மோடியையும் இத்தீர்மானம் பாராட்டியுள்ளது.

News August 5, 2025

BREAKING: ஆகஸ்ட் 14ல் அமைச்சரவை கூட்டம்

image

ஆகஸ்ட் 14-ம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆகஸ்ட் 14 அன்று காலை 11 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. பல்வேறு மக்கள் நல திட்டங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!