News April 15, 2025

நடிகர் எஸ்.எஸ்.ஸ்டான்லி மறைவு: பிரபலங்கள் இரங்கல்

image

நடிகரும், இயக்குநருமான <<16103601>>S.S.ஸ்டான்லி<<>> மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கேரளாவின் மூணாறில் பிறந்த ஸ்டான்லி, கோவையில் கல்லூரி படிப்பை முடித்த பிறகு இயக்குநர் மகேந்திரனிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். 4 படங்களை இயக்கியுள்ள இவர், பெரியார், ராவணன், சர்க்கார், மகாராஜா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் விருமாண்டி உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Similar News

News April 17, 2025

பாஜகவில் சேரப் போகிறேனா? சாட்டை பதில்

image

பாஜகவில் இணையப் போவதாக வெளியான தகவலை சாட்டை துரைமுருகன் மறுத்துள்ளார். MLA, MP சீட்டுக்காக தான் அரசியலுக்கு வரவில்லை எனவும், நாம் தமிழர் கட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சீமானின் தம்பியாகவே என்றும் இருப்பேன் எனவும் அவர் உறுதியுடன் கூறியுள்ளார். மேலும், சீமானுக்கு ஒருபோதும் துரோகம் செய்யமாட்டேன் எனவும், துரோகம் என்பது தனது மரபணுவிலேயே இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

News April 17, 2025

விஜய் டிவி பிரபலத்துக்கு 2-வது திருமணம்.. அசத்தும் ஜோடி

image

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளரான பிரியங்கா தேஷ்பாண்டே 2-வது திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ஏற்கனவே பிரவீன் என்பவருடன் திருமணம் ஆகி விவாகரத்தான நிலையில், தற்போது வசி என்பவருடன் இரண்டாவது திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ வைரலாகி வருகின்றன. தொகுப்பாளராக இருந்தாலும் பிரியங்காவுக்கு என பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது.

News April 16, 2025

கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு காயம்

image

DCக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து RR கேப்டன் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக வெளியேறியிருக்கிறார். 189 என்ற இலக்கை துரத்திய அவர், தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வருகிறார். அவர் 31 ரன்கள் எடுத்திருந்த போது, போட்டியின் 5.3ஆவது பந்தில் காயம் ஏற்பட்டது. விப்ராஜ் வீசிய அந்த பந்து ஃபுல்டாஸாக வந்ததால், அதனை ஓங்கி அடித்தபோது சாம்சனுக்கு வலி ஏற்பட்டு வெளியேறினார்.

error: Content is protected !!