News April 26, 2025
நடிகர் நாகேந்திரன் காலமானார்

பிரபல இயக்குநர், நடிகர் நாகேந்திரன் காலமானார். இவர் சரோஜா போன்ற படங்களில் நடித்துள்ளார். விமல் நடிப்பில் 2015-ல் வெளிவந்த ‘காவல்’ படத்தின் மூலம் நாகேந்திரன் இயக்குநராக அறிமுகமாகினார். இவர் தற்போது மரணமடைந்துள்ளதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதிவிட்டுள்ளார். நாகேந்திரனின் மறைவிற்கு திரைத்துறை பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். #RIP.
Similar News
News December 4, 2025
சரியான Moisturizer-ஐ தேர்வு செய்வது எப்படி?

குளிர்காலத்தில் Moisturizer பயன்படுத்துவது அவசியம். ஆனால் உங்களுக்கான சரியான Moisturizer எது என தெரியவில்லையா? கவலை வேண்டாம். உங்களுக்கு Oily skin இருந்தால் Gel based moisturizer-ஐ தேர்வு செய்யுங்கள். Dry Skin இருந்தால், Cream base-ல் இருக்கும் Moisturizer-ஐ பயன்படுத்தலாம். ஒருவேளை கலவையான சருமம் இருந்தால் ஹைலூரோனிக் அமிலம் கொண்ட Moisturizer-ஐ தேர்ந்தெடுக்கலாம் என டாக்டர்கள் சொல்கின்றனர். SHARE.
News December 4, 2025
தனியாக இருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டால்?

மாரடைப்பு என்பது சமீபகாலங்களில் எல்லா வயதினருக்கும் ஏற்படுகிறது. ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும்போது, நெஞ்சில் கடுமையான வலி, மூச்சுத் திணறல், மயக்கம், அதிகப்படியான வியர்வை போன்றவை இருக்கும். இதுபோன்ற சுழலில் நீங்கள் தனியாக இருந்தால், உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 4, 2025
தமிழக மக்களுக்கு நீதி கிடைத்திருக்கிறது: பாஜக

இன்றே தீபத்தை ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்ட நிலையில், திருப்பரங்குன்றத்திற்கு நயினார் நாகேந்திரன் விரைந்துள்ளார். அப்போது தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்த நயினார் நாகேந்திரன், தமிழக மக்களுக்கு நீதி கிடைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். தீபத்தூணில் தீபம் ஏற்றுவதால் யாருக்கு என்ன பிரச்னை எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.


