News April 27, 2025
நடிகர் நாகேந்திரன் திடீர் மரணம்.. காரணம் இதுதான்

காவல் படத்தை இயக்கியவர் நாகேந்திரன். இதேபோல், மேலும் சில படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். நேற்று அவர் திடீரென மரணம் அடைந்தார். நாகேந்திரனின் மறைவுக்கு மாரடைப்பே காரணம் என்றுத் தகவல் வெளியாகியுள்ளது. இளம் வயதில் அவர் மரணமடைந்தது தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நாகேந்திரன் மறைவுக்கு பல்வேறு நடிகர்களும், இயக்குநர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Similar News
News November 20, 2025
சற்றுமுன்: விடுமுறை… நாளை முதல் 3 நாள்கள் அரசு அறிவிப்பு

வார விடுமுறையையொட்டி நாளை முதல் நவ.23 வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. சென்னை,கோவை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து மக்கள் சிரமமின்றி ஊருக்குச் செல்ல கூடுதல் பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதுவரை சுமார் 5,000-க்கும் மேற்பட்டோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். www.tnstc.in இணையதளம், மொபைல் ஆப் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். நீங்க டிக்கெட் புக் பண்ணிட்டீங்களா?
News November 20, 2025
டெல்லி குண்டுவெடிப்பு.. மேலும் 4 பேர் கைது

டெல்லி குண்டுவெடிப்பு தொடர்பாக மேலும் 4 பேரை NIA கைது செய்துள்ளது. இதில், 3 பேர் டாக்டர்கள் ஆவர். கைது செய்யப்பட்ட 4 பேரும் டெல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர்களை 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க NIA-வுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நவ.10-ல் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
News November 20, 2025
காதலை எந்த மொழியில் எப்படி சொல்கிறார்கள்?

‘நான் உன்னை காதலிக்கிறேன்’ என்பதை ஒவ்வொரு மொழியிலும் எப்படி சொல்கிறார்கள் என்று தெரியுமா? பெரும்பாலும் ஆங்கிலத்தில் ‘ஐ லவ் யூ’ என்றுதான் பலரும் சொல்கின்றனர். ஆனால், இந்தியாவில் பேசப்படும் மொழிகளில், காதலை எப்படி வெளிப்படுத்துகிறார்கள் என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


