News February 13, 2025

நடிகர் மோகன் பாபுவுக்கு முன் ஜாமீன்

image

பிரபல நடிகரும், முன்னாள் எம்.பி.,யுமான மோகன் பாபு வீட்டிற்கு, குடும்பத் தகராறு குறித்து டிசம்பரில் செய்தி சேகரிக்க செய்தியாளர்கள் சென்றிருந்தனர். அப்போது டிவி செய்தியாளரை மோகன் பாபு தாக்கினார். இதில் அவர் காயமடைந்த நிலையில், புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஹைதராபாத் HC, முன்ஜாமீன் அளிக்க மறுத்ததால், அவர் SC-ல் முறையீடு செய்து முன்ஜாமீன் பெற்றுள்ளார்.

Similar News

News February 13, 2025

வருமான வரி மசோதா: என்ன மாற்றங்கள்?

image

லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட புதிய வருமான வரி மசோதாவில் எந்த வரிகளும் சேர்க்கப்படவில்லை. 622 பக்கங்கள் கொண்ட இதில் 1961 ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. ‘முந்தைய ஆண்டு’, ‘மதிப்பீட்டு ஆண்டு’ வார்த்தைகளும் புதிய மசோதாவில் நீக்கப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக ‘வரி ஆண்டு’ என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது.

News February 13, 2025

‘ஆஸ்கர்’ நடிகர் மீது பாலியல் வழக்கு

image

ஆஸ்கர் விருது வென்ற பிரபல ஹாலிவுட் நடிகர் கெவின் ஸ்பேஸ் மீது இங்கிலாந்து நடிகை ஒருவர் பாலியல் வழக்குத் தொடுத்துள்ளார். அமெரிக்கன் பியூட்டி, யுசுவல் சஸ்பெக்ட்ஸ் படங்களுக்காக 2 முறை ஆஸ்கர் விருது பெற்றவர் கெவின். அவர் மீது 2017இல் மீ டு இயக்கத்தில் முதலில் பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, மேலும் பல புகார்கள் கூறப்பட்ட நிலையில், தற்போது லண்டன் கோர்ட்டில் நடிகை வழக்கு தொடர்ந்துள்ளார்.

News February 13, 2025

BREAKING: தமிழக அமைச்சரவையில் மாற்றம்

image

TN அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பனிடம் இருந்த காதி, கிராம தொழில்கள் இலாகா, அமைச்சர் பொன்முடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வனத்துறையுடன் சேர்த்து காதி, கிராம தொழில்கள் இலாகாவையும் பொன்முடி இனி கவனிப்பார். CM ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று, அமைச்சரவை மாற்றத்திற்கு ஆளுநர் ரவி ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!