News December 14, 2024
நடிகர் மோகன் பாபு தலைமறைவு

பிரபல நடிகர் மோகன் பாபு தலைமறைவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. தனது மகனுடனான மோதலின்போது செய்தி சேகரித்த செய்தியாளரை தாக்கிய அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டிஸ்சார்ஜ் ஆன பின் வாக்குமூலம் வாங்க வீட்டிற்கு சென்ற போலீசார், அவர் அங்கு இல்லாதது கண்டு திகைத்தனர். பின்னர், 5 தனிப்படைகள் அமைத்து தலைமறைவானவரை தேடி வருகின்றனர்.
Similar News
News March 8, 2026
CPM-ம், பாஜகவும் ஒரே கட்சிதான்: ராகுல் காந்தி

கேரளாவில் CPM மற்றும் BJP என்பது தனித்தனி கட்சிகள் அல்ல. CJP என்ற ஒரே கட்சியாக அவை செயல்படுவதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். காங்கிரஸை வீழ்த்துவதே CJP கட்சியின் முக்கிய நோக்கம் என்ற அவர், CPM விவசாயிகள், தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கவில்லை என பேசியுள்ளார். மேலும், ட்ரம்பின் கட்டுப்பாட்டில் மோடி இருப்பதைப் போலவே, மோடியின் கட்டுப்பாட்டில் பினராயி விஜயன் உள்ளார் எனவும் விமர்சித்துள்ளார்.
News March 8, 2026
நாட்டின் பெண் சக்திகள்: PM மோடி மகளிர் தின வாழ்த்து!

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நாட்டின் பெண் சக்திகளுக்கு PM மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைத்து துறைகளிலும் பெண்கள் தங்களின் உறுதி, திறமை மற்றும் படைப்பாற்றலால், நாட்டின் முன்னேற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பெண்களின் சாதனைகள் நாட்டை ஊக்குவிப்பதுடன் வளர்ந்த நாடாக இந்தியாவை மாற்றுவதிலும் பங்களிப்பதாக பாராட்டியுள்ளார்.
News March 8, 2026
BREAKING: வரும் 12-ம் தேதி தவெக போராட்டம்

பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் தவெக தலைவர் விஜய், அரசியல் ரீதியாக அடுத்தடுத்த நகர்வுகளை தீவிரப்படுத்தியுள்ளார். அந்த வகையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக்கோரி வரும் 12-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் தவெகவினர் போராட்டத்தில் ஈடுபட, மா.செ.க்களுக்கு கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் விஜய், ஆதவ் உள்ளிட்டோர் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


