News May 17, 2024
நடிகர் கார்த்திக் குமார் ஆணையரிடம் புகார்

பட்டியலின சமுதாயத்தை தரக்குறைவாக பேசுவது போன்ற ஆடியோ வெளியானது தொடர்பாக, நடிகர் கார்த்திக் குமார் மயிலாப்பூர் துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். தனது முன்னாள் மனைவி சுசித்ராவை கேள்வி கேட்கும் போது, தாழ்த்தப்பட்ட சமூகத்தை இழிவாகவும் குறிப்பிட்ட சமூகத்தை உயர்த்திப் பேசியதாகவும் ஆடியோ வெளியானது. ஆனால், அது தனது குரல் அல்ல என அவர் வீடியோ வெளியிட்டிருந்த நிலையில் தற்போது மனு அளித்துள்ளார்.
Similar News
News December 29, 2025
மாபெரும் உலக சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா!

மகளிர் கிரிக்கெட்டில் ஒரு ஆண்டில் அதிக ரன்களை விளாசிய வீராங்கனை என்ற சாதனையை 4 முறை ஸ்மிருதி மந்தனா படைத்துள்ளார். அவர் 2018(1,291 ரன்கள்), 2022(1,290 ரன்கள்), 2024(1,659 ரன்கள்) & 2025-ல்(1,703 ரன்கள்) அதிக ரன்களை விளாசியுள்ளார். யாரும் இச்சாதனையை 2 முறைகூட செய்ததில்லை. மேலும், அடுத்தடுத்த ஆண்டுகளில்(2024 & 2025) அதிக ரன்களை விளாசிய ஒரே வீராங்கனை என்ற பெருமையையும் ஸ்மிருதி பெற்றுள்ளார்.
News December 29, 2025
பொங்கல் பரிசு.. தமிழக அரசு புதிய உத்தரவு

பொங்கல் பரிசுத் தொகுப்பு ஓரிரு நாள்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், பயன்பாட்டில் உள்ள ரேஷன் கார்டுகளை கணக்கெடுத்து அனுப்புமாறு துறை அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. புதிதாக ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்துள்ளோர், இறப்பு, இடப்பெயர்வு காரணமாக பயன்பாட்டில் இல்லாத அட்டைகளின் விவரங்களை உடனடியாக வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். இதனால், விரைவில் பொங்கல் தொகுப்பு குறித்த அறிவிப்பு வெளியாகலாம்.
News December 29, 2025
பாமக பஞ்சாயத்துக்கு மத்தியில் இன்று பொதுக்குழு

பாமகவில் தந்தை – மகன் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்று சேலத்தில் ராமதாஸ் தலைமையில் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் கூட்டணி, அன்புமணிக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் பற்றி முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 2026 தேர்தல் கூட்டணி தொடர்பாகவும் ராமதாஸ் அறிவிக்க உள்ளதால் அவரது ஆதரவாளர்கள் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.


