News March 29, 2024

பிக் பாஸை தொகுத்து வழங்க ரூ.200 கோடி வாங்கும் நடிகர்

image

பாலிவுட் நடிகர் சல்மான் கான், பிக் பாஸின் இந்தி பதிப்பு தொடரை தொகுத்து வழங்க ரூ.200 கோடி வாங்குகிறார். ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ், தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஒளிபரப்பப்படுகிறது. இதன் இந்தி பதிப்பில் ஒரு நாள் நிகழ்ச்சியில் தோன்ற ரூ.6 கோடி சல்மான் வாங்குகிறார். வார இறுதியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தோன்ற ரூ.12 கோடியும், ஒட்டுமொத்த தொடருக்கு ரூ.200 கோடியும் அவர் வாங்குகிறார்.

Similar News

News October 20, 2025

தீ விபத்தில் அழிந்த பழமையான காமிக்ஸ் ஓவியங்கள்

image

மஹாராஷ்டிராவில் 1967-ல் தொடங்கப்பட்டது Amar Chitra Katha காமிக்ஸ். இந்த நிறுவனத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு நிலவியது. 4 நாள்களாக போராடிய தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில், கைகளால் வரையப்பட்ட கிருஷ்ணர், பாண்டவர்கள் உள்ளிட்ட காமிக்ஸ் ஓவியங்கள் சிதைந்துள்ளன. இது சேத மதிப்பை தாண்டி, பெரிய வலியை கொடுத்ததாக நிறுவனத்தினர் கூறுகின்றனர்.

News October 20, 2025

தீபாவளி நாளில் அண்ணாமலை வைத்த கோரிக்கை

image

எத்திக்கும் இருள் அகன்று, ஒளி பெருகித் தித்திக்கும் தீபாவளி திருநாளில் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் என்று X-ல் அண்ணாமலை தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நன்னாளில் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும், செல்வமும் பெருகி நிறைந்திட எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் என்று வாழ்த்திய அவர், அனைவரும் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் தீபாவளியை கொண்டாட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

News October 20, 2025

ஒரே ஆண்டில் ₹50,000 வரை விலை உயர்ந்த ஜரிகை!

image

தங்கம், வெள்ளியை தொடர்ந்து பட்டு சேலைகள் சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறியுள்ளது. ஜரிகை உற்பத்திக்கு, தங்கமும், வெள்ளியும் முக்கிய மூலப்பொருட்களாக உள்ளன. எனவே, ஜரிகையின் விலையும் ஒரே ஆண்டில் ₹50,000 வரை உயர்ந்துள்ளது. கடந்தாண்டு ஏப்ரலில் ₹85,000-மாக இருந்த 1 கிலோ ஜரிகையின் விலை, தற்போது ₹1.35 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த தீபாவளிக்கு நீங்க பட்டு சேலை வாங்குனீங்களா?

error: Content is protected !!