News June 26, 2024

நடிகர் தர்ஷனுக்கு மனநல பாதிப்பு?

image

கொலை செய்த வழக்கில் கைதாகியுள்ள நடிகர் தர்ஷனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறிய விஷயங்களிலும்கூட எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர் என்றும், படப்பிடிப்பு தளங்கள் உள்ளிட்ட பல இடங்களில் பலருடன் சண்டை போட்டு இருக்கிறார் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது மனநல பாதிப்பை வெளிப்படுத்தும் அறிகுறி என்று கூறப்படுகிறது.

Similar News

News November 27, 2025

நவம்பர் 27: வரலாற்றில் இன்று

image

*மாவீரர் நாள்.
*1895 – நோபல் பரிசுக்கான திட்டத்தை தெரிவித்த ஆல்ஃபிரட் நோபல், தனது சொத்துக்களை அப்பரிசுக்கான மூலதனமாக அறிவித்தார்.
*1940 – புரூஸ் லீ பிறந்தநாள்.
*1977 – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்.
*1986 – சுரேஷ் ரெய்னா பிறந்தநாள்.
*2008 – முன்னாள் PM வி.பி.சிங் நினைவுநாள்.

News November 27, 2025

டெஸ்லாவின் முதல் முழுநேர சேவை மையம் தொடக்கம்

image

டெஸ்லா கார் நிறுவனம், இந்தியாவில் முதல் முழுநேர விற்பனை மையத்தை ஹரியானாவில் தொடங்கியுள்ளது. இந்த மையத்தில் கஸ்டமர்கள் ஆலோசனைகள், புக்கிங், டெஸ்ட் டிரைவ் சேவைகளை பெறலாம். முன்னதாக, மும்பை மற்றும் டெல்லியில் அமைக்கப்பட்ட மையங்கள் காட்சிப்படுத்துதல் மையங்களாக மட்டுமே செயல்பட்டு வருகின்றன. டெஸ்லா நிறுவனம் தனது 2 ‘Y’ வேரியண்ட் மாடல்களை மட்டுமே இறக்குமதி செய்து, இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

News November 27, 2025

57 வயதில் இரட்டை குட்டி போட்ட அனார்கலி

image

மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னா புலிகள் காப்பகத்தில் நடந்த ஒரு அரிய நிகழ்வு கவனத்தை ஈர்த்து வருகிறது. 57 வயதான அனார்கலி என்ற யானை, இரட்டை பெண் குட்டிகளை ஈன்றுள்ளது. 2 குட்டிகளும், 3 மணிநேர இடைவெளியில் பிறந்துள்ளன. மேலே, இரட்டை குட்டிகளுடன் அனார்கலி இருக்கும் போட்டோக்களை உங்களுக்காக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE

error: Content is protected !!