News August 27, 2024
நடிகர் பிஜிலி ரமேஷ் காலமானார்

உடல் நலக்குறைவு காரணமாக நடிகர் பிஜிலி ரமேஷ் இன்று அதிகாலை காலமானார். சமூக வலைத்தளங்களின் மூலம் பிரபலமான இவர், தனது நகைச்சுவை வசனத்தால் மக்களிடம் கவனம் பெற்றார். கோலமாவு கோகிலா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான இவர், நட்பே துணை, கோமாளி உள்ளிட்ட படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். கிடைத்த வாய்ப்புகளை குடிப்பழக்கத்தால் இழந்து வந்த இவர், உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
Similar News
News March 3, 2026
தங்கம் விலை மளமளவென குறைந்தது

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரின் காரணமாக சர்வதேச சந்தையில் கடந்த 2 நாள்களில் தங்கம் விலை உயர்ந்தது. ஆனால், இன்றைய நிலவரப்படி 1 அவுன்ஸ் (28g) தங்கம் $20 (இந்திய மதிப்பில் ₹1,831) குறைந்து $5,352.60-க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளியின் விலையும் $5 குறைந்து $90.36-க்கு விற்பனையாகிறது. இதே நிலை நீடித்தால் இந்திய சந்தையிலும் தங்கத்தின் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.
News March 3, 2026
World Dosa day: தோசை உருவான வரலாறு தெரியுமா..?

வாரத்தில் 7 நாள் தோசை கொடுத்தாலும் சாப்பிடுவேன் என சொல்லும் ஆள்கள்தான் அதிகம். இன்று உலக தோசை தினம். சரியாக முதன்முதலில் எப்போது, எங்கு தோசை உருவானது என்ற எந்த தகவலும் இல்லை. ஆனால், சிலப்பதிகாரம் போன்ற நூல்களிலும் தோசை போன்ற ஒரு உணவின் குறிப்பு இடம்பெறுகிறது. அதே போல, 7-ம் நூற்றாண்டில் உடுப்பியின் கோயில் பகுதிகளில் தோசை உருவானதாக சொல்லப்படுகிறது. உங்களுக்கு பிடித்த தோசை வகையை கமெண்ட் பண்ணுங்க!
News March 3, 2026
இந்தியர்களை மீட்க சிறப்பு விமானங்கள்!

வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க, 10 சிறப்பு விமானங்களை INDIGO இயக்கும் என விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இருந்து இந்த விமானங்கள் ஹைதராபாத், மும்பை, டெல்லி வந்தடையும். வளைகுடா நாடுகளை வான்வழியாக ஈரான் தாக்குவதால் அங்குள்ள இந்திய தூதரகங்களிடம் களநிலவரத்தை கேட்டறிந்து, உரிய அனுமதி பெற்ற பிறகே இந்த விமானங்கள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.


