News October 20, 2025

நடிகர் பாலமுருகன் காலமானார்.. குவியும் இரங்கல்

image

இயக்குநர், பாடலாசிரியர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்ட சி.பாலமுருகன் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக உடுமலைப்பேட்டையில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. 2007-ல் இவர் இயக்கத்தில் வெளிவந்த ‘முதல் கனவே’ படத்தில் விக்ராந்த், மணிவண்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ‘குண்டக்க மண்டக்க’ படத்திற்கு வசனம் எழுதியதோடு நடித்தும் உள்ளார். அவருக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News October 20, 2025

தீபாவளி நாளில் அண்ணாமலை வைத்த கோரிக்கை

image

எத்திக்கும் இருள் அகன்று, ஒளி பெருகித் தித்திக்கும் தீபாவளி திருநாளில் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் என்று X-ல் அண்ணாமலை தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நன்னாளில் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும், செல்வமும் பெருகி நிறைந்திட எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் என்று வாழ்த்திய அவர், அனைவரும் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் தீபாவளியை கொண்டாட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

News October 20, 2025

ஒரே ஆண்டில் ₹50,000 வரை விலை உயர்ந்த ஜரிகை!

image

தங்கம், வெள்ளியை தொடர்ந்து பட்டு சேலைகள் சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறியுள்ளது. ஜரிகை உற்பத்திக்கு, தங்கமும், வெள்ளியும் முக்கிய மூலப்பொருட்களாக உள்ளன. எனவே, ஜரிகையின் விலையும் ஒரே ஆண்டில் ₹50,000 வரை உயர்ந்துள்ளது. கடந்தாண்டு ஏப்ரலில் ₹85,000-மாக இருந்த 1 கிலோ ஜரிகையின் விலை, தற்போது ₹1.35 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த தீபாவளிக்கு நீங்க பட்டு சேலை வாங்குனீங்களா?

News October 20, 2025

மழைக்கு கடந்த 18 நாள்களில் 20 பேர் பலியான சோகம்

image

மழையால் கடந்த 18 நாள்களில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக TN அரசு அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அக்.1 – 18-ம் தேதி வரை கடலூர், தி.மலை உள்ளிட்ட மாவட்டங்களில் 10 பெண்கள், 8 ஆண்கள், 2 குழந்தைகள் என மொத்தம் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 21 பேர் காயமடைந்துள்ளனர். மழையால் 435 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

error: Content is protected !!