News March 2, 2025

நடிகரும், பாடகருமான டேவிட் ஜோஹன்சன் காலமானார்

image

பிரபல ஹாலிவுட் நடிகரும், பாடகருமான டேவிட் ஜோஹன்சன் (75) உடல்நலக்குறைவால் காலமானார். அமெரிக்காவில் மிகவும் பிரபலமான New York Dolls இசைக் குழுவில் முக்கிய பாடகர்களில் ஒருவரான இவர் தனது காந்த குரலால் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். Candy Mountain, Married to the Mob ஆகிய திரைப்படங்களின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்றார். டேவிட் ஜோஹன்சன் மறைவுக்குப் பலரும் RIP தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News March 25, 2026

வெள்ளி விலை கிலோவுக்கு ₹10,000 உயர்ந்தது!

image

<<19470679>>தங்கத்தை தொடர்ந்து<<>> வெள்ளி விலையும் இன்று உயர்வைக் கண்டுள்ளது. சில்லறை விற்பனையில் கிராமுக்கு ₹10 உயர்ந்து ₹260-க்கும், பார் வெள்ளி கிலோவுக்கு ₹10,000 உயர்ந்து ₹2,60,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் வெள்ளி விலை இன்று மட்டும் 6% உயர்ந்துள்ளதால், விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

News March 25, 2026

தொகுதி பங்கீட்டில் இபிஎஸ் கை ஓங்கியதா?

image

கூட்டணிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்ததில் ஸ்டாலினை விட EPS கை ஓங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. 2021-ல் வெறும் 0.5% வாக்கு வாங்கிய தேமுதிகவுக்கு 10 தொகுதிகளை திமுக கொடுத்த நிலையில், 2.3% வாக்கு வாங்கிய அமமுகவுக்கோ 11 தொகுதிகளை கொடுத்து அதிமுக சரிகட்டியுள்ளது. அதேபோல், பாமக வரலாற்றிலேயே மிக குறைந்த எண்ணிக்கையாக 18 தொகுதிகள், காங்கிரஸை விட குறைவாக பாஜகவுக்கு 27 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.

News March 25, 2026

சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த ‘யூத்’ படக்குழு

image

<<19461388>>கானா தினேஷின்<<>> ‘ஆசப்பட்ட பொண்ணு பேரு மோனிஷா’ பாடலை அனுமதி பெறாமல் ‘யூத்’ படத்தில் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்த படக்குழு, DIVO என்ற நிறுவனத்திடம்தான் பாடலின் உரிமம் இருப்பதாக கூறியுள்ளது. மேலும், அதற்கான உரிய கட்டணத்தை செலுத்தி முறையான அனுமதி பெற்ற பிறகே படத்தில் பாடல் பயன்படுத்தப்பட்டு இருப்பதாகவும் தெளிவுப்படுத்தியுள்ளது.

error: Content is protected !!