News October 12, 2025
கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை பாயும்: அமைச்சர்

தீபாவளி பண்டிகையையொட்டி, ஆம்னி பஸ்களில் 3 மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் கட்டண வசூலை கண்காணிக்க தமிழகம் முழுவதும் போக்குவரத்து துறையின் சார்பில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரித்தார்.
Similar News
News October 12, 2025
ரேஷன் கார்டுக்கு தீபாவளி பரிசு.. அரசு முக்கிய உத்தரவு

புதுச்சேரியில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு ₹570 மதிப்பிலான <<17957997>>தீபாவளி தொகுப்பு<<>> வழங்கப்படும் என CM ரங்கசாமி அறிவித்திருந்தார். அதனை மக்களுக்கு விநியோகம் செய்யும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இம்மாதத்திற்கான ரேஷன் பொருள்களை தீபாவளி தொகுப்பு முன்னரே மக்களுக்கு வழங்க வேண்டும் என ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். TN-ல் தீபாவளி பரிசாக முதியோருக்கு வேட்டி, சேலை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
News October 12, 2025
சாய் சுதர்சன் காயம்: அப்டேட் கொடுத்த பிசிசிஐ

வெஸ்ட் இன்டீஸின் முதல் இன்னிங்ஸில் ஜான் கேம்ப்பெல்லின் கேட்ச்சை பிடித்த போது சாய் சுதர்சனுக்கு காயம் ஏற்பட்டது. வலியில் துடித்த அவரை உடனடியாக மருத்துவ குழு அழைத்து சென்றது. மூன்றாம் நாளான இன்றும் அவர் பீல்டிங் செய்யாததால் அவருக்கு பெரிய காயம் ஏற்பட்டதா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் லேசான காயம் மட்டுமே ஏற்பட்டதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 12, 2025
தந்தையின் கையை இறுகப்பற்றுவாரா விஜய்?

தனது தந்தையை வழிகாட்டியாக கொண்டு விஜய் செயல்பட்டால் நல்லது என அமீர் கூறியுள்ளார். விஜய்யின் சினிமா பயணம், தந்தை SA சந்திரசேகரின் இயக்கத்திலிருந்தே தொடங்கியது. முன்னணி ஹீரோவான பிறகும் சில படங்களுக்கு பிரச்னை ஏற்பட்ட போது, அரசியல் ஆதரவுகளை SAC பெற்று கொடுத்தார். இதன் பிறகு, தந்தையுடன் மனக்கசப்பில் இருந்த விஜய், சமீப காலமாகவே அவருடன் நெருக்கம் காட்டுகிறார். SAC-ஐ அரசியலுக்கு அழைப்பாரா விஜய்?