News April 18, 2025
திமுகவில் இருந்து அதிரடி நீக்கம்

கொலை மிரட்டல், பண மோசடி உள்ளிட்ட புகார்களில் சிக்கிய திமுக நிர்வாகி பி.தியாகராஜன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை மாவட்ட வர்த்தகர் அணி அமைப்பாளராக இருந்த தியாகராஜன் மீது பெண் ஒருவர் பரபரப்பு புகார் அளித்திருந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், வர்த்தகர் அணியின் மாவட்ட துணை அமைப்பாளர்களாக இருந்த சக்கரவர்த்தி, தணிகைவேல் ஆகியோரும் நீக்கப்பட்டுள்ளனர்.
Similar News
News November 21, 2025
உதடு வெடிப்பை தடுக்க உதவும் வழிகள்

குளிர்காலத்தில் உதடு வெடிப்பு, நமக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். அந்த நேரத்தில், சாப்பிடுவது கூட கஷ்டமாக இருக்கும். அதை எதிர்கொள்ள, எளிமையான வழிகள் உள்ளன. அவை என்னென்ன வழிகள் என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.
News November 21, 2025
இவர்களுக்கு ₹1,000 மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக இணைபவர்களின் லிஸ்ட் தயாராகி வருவதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. தேர்வு செய்யப்படும் குடும்பத் தலைவிகளுக்கு, செல்போன் மூலம் டிசம்பர் முதல் வாரத்தில் குறுஞ்செய்தி அனுப்பப்படும். டிச.15-ல் அவர்களது வங்கிக் கணக்கில் ₹1,000 வரவு வைக்கப்படும். குறுஞ்செய்தி வராதவர்களுக்கு பணம் கிடைக்காது. அரசு அடுத்த அறிவிப்பு வெளியிடும் வரை காத்திருக்க வேண்டும்.
News November 21, 2025
விஜய் பரப்புரைக்கு அனுமதி மறுப்பு.. இதுதான் காரணம்

சேலத்தில் <<18340402>>விஜய்யின் பிரசாரத்திற்கு<<>> அனுமதி மறுத்தது குறித்து மாவட்ட போலீஸ் விளக்கமளித்துள்ளது. பிரசார நிகழ்ச்சியில் எத்தனை பேர் பங்கேற்பார்கள் என்ற விவரம் அனுமதி கடிதத்தில் இல்லை என்றும், அடுத்த முறை 4 வாரங்களுக்கு முன்பாகவே அனுமதி கோர வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறைபாடுகளை நிவர்த்தி செய்து மீண்டும் கடிதம் வழங்கினால் அதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்று போலீஸ் கூறியுள்ளது.


