News October 4, 2025
சற்றுமுன் அதிரடி கைது

சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் வைத்து யூடியூபர் மாரிதாஸை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கரூர் துயர வழக்கில் விஜய் & TVK தரப்பில் யாருமே நீதிமன்றத்தில் தங்கள் பக்க வாதத்தை முன்வைக்க இயலாத நிலையை உருவாக்கி, தந்திரமாக திமுக ஒரு நீதிமன்ற நாடகத்தையே நடத்தி முடித்துள்ளது என்று X-ல் விமர்சித்திருந்தார். இந்நிலையில், உண்மைக்கு மாறான தகவலை பரப்பியதாக, சைபர் க்ரைம் போலீசார் அவரை கைது செய்தனர்.
Similar News
News March 20, 2026
அரூரில் திமுகவினர் தீவிர பிரச்சாரம்!

அரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மொரப்பூர் மேற்கு ஒன்றியம், பன்னிகுளம் ஊராட்சியில் திமுக சார்பில் தேர்தல் பரப்புரை நேற்று (மார்ச்.19) நடைபெற்றது. தேர்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளர் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், திமுக மகளிர் அணியைச் சேர்ந்த பிரச்சாரக் குழுவினர் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
News March 20, 2026
திருச்சி: கொலை வழக்கு – 2 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்

புத்தாநத்தம் பகுதியில் பிரபாகரன் என்பவர் மதுபோதையில் அவரது மனைவியை அடித்து, துன்புறுத்துவதாக அவரது மனைவி அபிராமி உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அபிராமியின் உறவினர் பிரபு, கூட்டாளி சரவணனுடன் சேர்ந்து பிரபாகரனை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இந்நிலையில் சிறையில் இருந்து வரும் இருவரையும் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க திருச்சி மாவட்ட எஸ்.பி பரிந்துரைத்துள்ளார்.