News September 7, 2025
அதிரடி நீக்கம்.. இபிஎஸ்-ன் புதிய திட்டம்

செங்கோட்டையனை கட்சியில் இருந்து நீக்கியது சர்வாதிகாரம் என எதிர் அணியினர் சாடினாலும், ஜெயலலிதா மாதிரி தைரியமான முடிவு என EPS-ன் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். BJP சார்பில் அழுத்தம் கொடுத்தாலும் மீண்டும் ஒன்றிணைப்பு இல்லை என உறுதியாக உள்ளாராம். பொதுச்செயலாளர் வழக்கில் MHC சாதகமான தீர்ப்பு, BJP ஓவராக அழுத்தம் கொடுத்தால் அவர்களை விட்டுவிட்டு TVK-வுடன் கூட்டணி வைக்கலாமா எனவும் ஆலோசித்ததாக பேசப்படுகிறது.
Similar News
News September 8, 2025
செங்கோட்டையனின் அடுத்த பிளான்

தமிழகம் முழுக்க செங்கோட்டையன் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. பிரிந்து சென்றவர்களை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என கெடு விதித்த செங்கோட்டையனை முக்கிய பொறுப்புகளில் இருந்து EPS நீக்கினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், செங்கோட்டையன் தன் கருத்துக்கு அதிமுக தொண்டர்களிடம் ஆதரவு திரட்ட சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளாராம்.
News September 8, 2025
சிவப்பு ரோஜாவாக மலர்ந்த ஐஸ்வர்யா லட்சுமி

வசீகரிக்கும் அழகால் ரசிகர்களின் மனங்களை வென்ற ஐஸ்வர்யா லட்சுமி இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள படங்கள் வைரலாகி வருகின்றன. பொன்னியின் செல்வனில் கடல் கன்னியாக தோன்றிய இவருக்கு ‘மாமன்’, ‘தக் லைஃப்’ என அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தன. தற்போது கட்டா குஸ்தி இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். ஐஸ்வர்யா லட்சுமி நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது ?
News September 8, 2025
பாகுபலியில் நடிக்க ஸ்ரீதேவிக்கு சம்பள பிரச்னையா?

பாகுபலி படத்தில் ராஜமாதா வேடத்தில் ஸ்ரீதேவி நடிக்கவிருந்ததாக போனி கபூர் கூறியுள்ளார். ராஜமெளலி அவரிடம் கதை சொல்லிய பிறகு தயாரிப்பு குழுவினர் சம்பளம் குறைவாக பேசியதால் ஸ்ரீதேவியை அப்படத்தில் நடிக்க அனுமதிக்கவில்லை என அவர் தெரிவித்தார். ராஜமெளலியிடம் தயாரிப்பு குழுவினர் உண்மையை கூறாமல் தவறான தகவலை சொல்லிவிட்டதாகவும் போனி கபூர் குறிப்பிட்டார். ராஜமாதா வேடத்திற்கு ஸ்ரீதேவி பொருத்தமானவரா?