News April 24, 2025
முப்படைகளுக்கும் பறந்த அதிரடி உத்தரவு

பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு இந்தியா பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், பதிலடி தாக்குதல் தொடர்பாக இன்று(ஏப். 24) மாலை 6 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதேநேரத்தில், முப்படைகளும் தயார் நிலையில் இருக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், எந்த நேரத்திலும் இந்தியா தாக்குதல் நடத்தலாம் எனக் கூறப்படுகிறது.
Similar News
News April 24, 2025
2 வாரம் இண்டெர்நெட் இல்லாமல் இருந்தால்…

இப்போது, பலருக்கும் இருக்கும் முக்கிய பிரச்னையே எந்த ஒரு விஷயத்திலும் Focus பண்ண முடியாமல் தொடர்ந்து தடுமாறுவது தான். ஆனால், 2 வாரம் இண்டெர்நெட் பயன்படுத்தாமல் இருந்தால், உங்கள் மூளை 10 ஆண்டுக்கு முன்பு எப்படி செயல்பட்டதோ அதே புத்துணர்ச்சியுடன் செயல்படும் என ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்துகின்றனர். Texas யூனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர். ட்ரை பண்ணி பாருங்க!
News April 24, 2025
மோசமான ரெக்கார்டை படைத்த SRH!

IPL தொடரில் SRH மோசமான ரெக்கார்டை படைத்துள்ளது. IPL-ல் அந்த அணி மொத்தமாக இதுவரை 100 தோல்விகளை சந்தித்துள்ளது. இந்த நிலைக்கு தள்ளப்பட்ட 7-வது டீம் SRH. இந்த பட்டியலில், டெல்லி & பஞ்சாப் தலா 137 முறையும், RCB (132), KKR (125), மும்பை (121), ராஜஸ்தான் (113) மற்றும் CSK (105) முறையும் தோல்வி அடைந்துள்ளன.
News April 24, 2025
எப்படி இருக்கிறது சுந்தர்.சி – வடிவேலுவின் ‘கேங்கர்ஸ்’?

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சுந்தர்.சி – வடிவேலு காம்போவில் வெளிவந்துள்ள ‘கேங்கர்ஸ்’ படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக வடிவேலு காமெடியில் மிரட்டி இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்கின்றனர். இந்த சம்மருக்கு இந்த படம் தான் பெஸ்ட் என்றும், Second Half-ல் சுந்தர்.சி-யின் Trademark காமெடி பிளாஸ்ட் என்றும் பதிவிடுகின்றனர். நீங்க படம் பாத்தாச்சா.. எப்படி இருக்கு?