News September 5, 2024
ரவுடிகள் மீது நடவடிக்கை: எஸ்.பி. அதிரடி உத்தரவு

நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிலம்பரசன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் உதவி காவல் கண்காணிப்பாளர்கள் துணை கண்காணிப்பாளர்கள் காவல் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர் நிலுவையில் உள்ள வழக்கு விரைந்து முடிக்கவும் ரவுடிகள் மீது அதிரடி நடவடிக்கைகளை தொடரவும் கஞ்சா கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.
Similar News
News July 6, 2025
மேலும் 4 தொழில் பூங்கா அமைகிறது

கங்கைகொண்டான் சிப்காட்டில் தொழில் பூங்கா வேகமாக வளர்ந்து வருகிறது. இங்கு மேலும் ஒரு தொழில் பூங்கா அமைக்கப்படுகிறது. இதை தொடர்ந்து நாங்குநேரி வட்டாரம் மறுகால் குறிச்சி, திருவரமங்மைபுரம் ஆகிய பகுதிகளில் 2260 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன. கங்கைகொண்டான் மற்றும் மூலைக்கரைப்பட்டியிலும் தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
News July 5, 2025
நெல்லை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

திருநெல்வேலி மாவட்டம் உட்கோட்ட இரவு ரோந்து காவல் அதிகாரிகள் பெயர்களை, மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மானூர், ஏர்வாடி, உவரி ஆகிய காவல் நிலையங்களின் காவல் ஆய்வாளர்களும், வீரவநல்லூர், பாப்பாக்குடி காவல் நிலையங்களின் உதவி ஆய்வாளர்களும் இன்று (ஜூலை 05) இரவு ரோந்து பணிகளில் ஈடுபடுகின்றனர். துணை காவல் கண்காணிப்பாளர் சத்யராஜ் இந்த ரோந்து பணிகளை மேற்பார்வையிடுகிறார்.
News July 5, 2025
தேரோட்டம் செல்லும் பக்தர்களுக்கு உதவி எண்கள்

நெல்லையப்பர் கோயில் ஆனி பெரும் தேர்த் திருவிழா நடைபெற்று வருகிறது. முக்கிய விழாவான தேரோட்டம் வருகிற செவ்வாய்க்கிழமை 8ஆம் தேதி காலை நடைபெறுகிறது. இதில், லட்சக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு வசதியாக காவல்துறை சார்பில் அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதை தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.