News April 7, 2025
செங்கோட்டையன் மீது நடவடிக்கையா?

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை, செங்கோட்டையன் 2வது முறையாக சந்தித்தது பல யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது. இதற்கிடையில், செல்வாக்கு இல்லாத செங்கோட்டையன் பற்றி பேசி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் சாடியிருந்தார். இந்நிலையில், பாஜக தலைவர்களுடன் நெருக்கம் காட்டும் செங்கோட்டையன் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க இபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News November 9, 2025
விஜய் கட்சியில் இருந்து நீக்கம்.. சர்ச்சை வெடித்தது

தவெகவில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பணம் பெற்று கொண்டு பொறுப்பு வழங்குவதோடு, 7 பேரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக சர்ச்சை வெடித்துள்ளது. விஜய் அறிவித்த மகளிர் அணி பொறுப்பாளர்களை, மாவட்ட பொறுப்பாளர்களான கோபி, தனம் ஆகியோர் மாற்றியதே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. ஏற்கெனவே தி.மலை, விழுப்புரம், திருச்சியில் பணம் பெற்றுக் கொண்டு கட்சியில் பொறுப்பு வழங்கப்படுவதாக நிர்வாகிகள் குற்றம்சாட்டியிருந்தனர்.
News November 9, 2025
இறுதி சடங்கில் கண்விழித்து ஷாக் கொடுத்த நபர்!

கர்நாடகாவின் பெட்டகேரி பகுதியில், நாராயணனுக்கு (38) பித்தப்பை பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஆனால், தீவிர சிகிச்சைக்கு பின், அவர் உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்டுள்ளது. இனி அவரை பார்க்கவே முடியாது என்ற தவிப்பில், நண்பர்களும், உறவினர்களும் இறுதி மரியாதை செய்த நிலையில், திடீரென கண்விழித்து அனைவருக்கும் ஹார்ட் அட்டாக் கொடுத்துள்ளார் நாராயணன். தற்போது, அவருக்கு ஹாஸ்பிடலில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
News November 9, 2025
தோனியின் மாபெரும் ரெக்கார்டை உடைக்கும் SA வீரர்!

ODI கிரிக்கெட்டில் அதிகமுறை தொடர் நாயகன் விருதை வென்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்ற பெருமையை MS தோனி தன்வசம் வைத்திருந்தார். அவர் இதுவரை 7 முறை தொடர்நாயகன் விருதை வென்றுள்ளார். இச்சாதனையை தற்போது, தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குவின்டன் டி காக் சமன் செய்துள்ளார். அவர் விரைவில் தோனியின் சாதனையை முறியடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


