News August 16, 2024
132 நிறுவனங்கள் மீது நடவடிக்கை: தொழிலாளர் உதவி ஆணையர்

நெல்லை தொழிலாளர் உதவி ஆணையர் முருகப் பிரசன்னா நேற்று(ஆக.,15) விடுத்துள்ள செய்தி குறிப்பில், சுதந்திர தினத்தை முன்னிட்டு நெல்லை, தென்காசி மாவட்டங்களில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் ஆகியவை விடுமுறை அளிக்காத அல்லது மாற்று விடுமுறை அளிக்காத 132 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு, அவற்றின் உரிமையாளர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
Similar News
News January 6, 2026
நெல்லை: இன்று இங்கெல்லாம் மின்தடை

திருநெல்வேலி மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று (ஜன.6) மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் பல்வேறு இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. பழையபேட்டை, காந்திநகர், குன்னத்தூர், பேட்டை, அபிஷேகப்பட்டி, களக்காடு சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் வி.கே.புரம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை இருக்கும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. SHARE
News January 6, 2026
நெல்லையில் பொங்கல் டோக்கன் விநியோகம் பணி தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டத்தில் மொத்தம் 796 நியாய விலை கடைகள் மூலம் 501769 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த மொத்த குடும்ப அட்டைகளில் கூட்டுறவு, மகளிர் சுய உதவி குழு, தமிழ்நாடு வாணிப கழகக் கடைகள் மற்றும் இலங்கை தமிழர் ஆகிய அனைவருக்கும் இப்பரிசு தொகுப்பு வழங்கப்படும்.
ஜனவரி 8 முதல் பரிசு தொகுப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது.