News March 29, 2024
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் நடவடிக்கை

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது ஜனநாயகத்தை சீர்குலைப்பவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் செலுத்த வேண்டிய ₹1,823 கோடி வரியை செலுத்துமாறு ஐடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இதுபோன்ற செயல்களை மீண்டும் ஒருமுறை செய்ய தைரியம் வராத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது எனது உத்தரவாதம் எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 22, 2025
சி.வி.ராமன் பொன்மொழிகள்

*அறிவியலின் அழகு, பிரபஞ்சத்தின் மர்மங்களை அவிழ்க்கும் திறனில் உள்ளது. *அறிவியலின் சாராம்சம் உபகரணங்கள் அல்ல, சுதந்திரமான சிந்தனை, கடின உழைப்பு. *ஆர்வம், கற்பனை மற்றும் விடாமுயற்சி ஆகிய மூன்று முனை அணுகுமுறையே அறிவியல் கண்டுபிடிப்புக்கான திறவுகோலாகும். *ஒவ்வொரு பெரிய கண்டுபிடிப்பும் தெரியாதவற்றில் ஆழமாக ஆராயும் ஆர்வத்தால் தொடங்குகிறது.
News November 22, 2025
20 ஆண்டுகளுக்கு பின் முக்கிய பொறுப்பை இழந்த நிதிஷ்

10-வது முறையாக நிதிஷ் குமார் CM-ஆக பதவியேற்ற நிலையில், அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதில் 20 ஆண்டுகளாக நிதிஷிடம் இருந்த உள்துறை DCM சாம்ராட் சவுத்ரிக்கு ஒதுக்கப்பட்டது. மற்றொரு DCM விஜய் குமாருக்கு வருவாய் மற்றும் நில சீர்த்திருத்த துறை வழங்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், அமைச்சரவை செயலகம் உள்ளிட்ட துறைகளை CM தன்னிடம் வைத்துள்ளார்.
News November 22, 2025
விஜய்க்கு சொன்ன கதையில் ரஜினி நடிப்பாரா?

ரஜினியின் 173 படத்தின் இயக்குநர் இன்னும் முடிவாகவில்லை என்றாலும், அதுகுறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, ரஜினிக்கு ஆர்.ஜே.பாலாஜி கதை ஒன்றை சொல்லியுள்ளாராம். இது விஜய்க்கு சொல்லப்பட்டு சில காரணங்களால் அடுத்த கட்டத்துக்கு செல்லாமல் நின்ற கதையாம். ஆக்ஷன் சப்ஜக்ட்களில் இருந்து விலக நினைக்கும் ரஜினி, கலகலப்பான ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைவாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.


