News September 1, 2024
நடிகைகளின் புகார்கள் மீது தாமதிக்காமல் நடவடிக்கை

தமிழ் நடிகைகள் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக வலியுறுத்தியுள்ளது. திரையுலகில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல் குறித்து ராதிகா, குட்டி பத்மினி போன்ற பல்வேறு நடிகைகள் குற்றச்சாட்டு தெரிவித்த நிலையில், அதுகுறித்து ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், புகார்களில் உண்மையிருந்தால் அரசு தாமதிக்காது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
Similar News
News July 9, 2025
அகமதாபாத் விமான விபத்து: முதல் கட்ட அறிக்கை தாக்கல்

அகமதாபாத் விமான விபத்தில் 260 பேர் உயிரிழந்த நிலையில், இந்த விபத்து தொடர்பாக விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) விசாரணை நடத்தி வருகிறது. இந்தக் குழு விசாரணை அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்யும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இக்குழுவினர் முதல் கட்ட அறிக்கையை மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது.
News July 9, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஜூலை 9 – ஆனி 25 ▶ கிழமை: புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶ கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶ எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶ குளிகை: 10:30 AM – 12:00 PM ▶ திதி: சதுர்தசி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶ பிறை: வளர்பிறை.
News July 9, 2025
விமான இன்ஜினில் சிக்கிய ஒருவர் பலி

இத்தாலியில் விமானத்தின் இன்ஜினால் உள்ளிழுக்கப்பட்டு ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மிலன் நகரில் பெர்கமோ விமான நிலையத்தில் விமானம் ஓடுதளத்தில் புறப்படத் தயாராக இருந்த போது அதனருகே ஓடிக்கொண்டிருந்த ஊழியர் ஒருவர் இன்ஜினில் உள்ளிழுக்கப்பட்டுள்ளார். இந்த அசம்பாவிதம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இதனால் விமான நிலையத்தில் 9 விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.